நஜிப், வாக்களியுங்கள் என்ற Undilah வீடியோவை புறக்கணிப்பதை ஏற்க முடியாது

‘அந்த வீடியோவில் கட்சி சார்புடைய விஷயங்கள் ஏதுமே இல்லை. அம்னோவை அதிகாரத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சம் வாட்டுகிறது. அதனால் அது தனது சொந்த நிழலைக் கண்டு கூட பயப்படுகிறது’

வாக்களியுங்கள் என்ற ‘Undilah’ வீடியோவை திரைப்படத் தணிக்கையாளர்கள் ‘இன்னும் அங்கீகரிக்கவில்லை’

பெண்டர்: அந்த ‘Undilah’ வீடியோவை நாட்டிலுள்ள இளைஞர்களை அணுகுவதற்கு ‘ஏற்புடைய’ வழியாகக் கருதப்பட வேண்டும். அதன் ஆக்கம் சிறப்பாக இருக்கிறது. காலத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ள அது ஒரே மலேசியா உணர்வை உண்மையிலேயே கொண்டுள்ளது.

மலேசிய மக்களுடைய பெருமையை அது பெரிதுபடுத்துகிறது. கொண்டாடுகிறது.  வெறும் சுலோகங்களை அள்ளி வீசும் ஆளும் வர்க்கத்தைப் போல் அல்ல.

ஜனநாயகம்: அந்த வீடியோ தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் கணினி அல்லது இணைய வசதி இல்லாத, நாட்டின் மூலை முடுக்குகளில் இருக்கும் ஏழை மக்களை அதன் செய்தி சென்றடையும்.

ஆனால் அது பிஎன் ஆட்சியாளர்களுக்கு நல்லதல்ல. ஏனெனில் அவர்கள் காலம் காலமாக பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றனர். மலேசியாவுக்கும் பிரச்னைகள் இருப்பதாக தெங்கு ரசாலி ஹம்சா (குறிப்பிடத்தக்க பிஎன் தலைவர்) சொல்வது அவர்களுக்கு பிடிக்காது.

ரெத்னம்: நான் பார்த்ததிலேயே நல்ல வீடியோ தயாரிப்பு இது தான். ரசாலியின் வார்த்தைகள் உள்ளத்தைத் தொடுகின்றன. அந்த வீடியோவை என் கவனத்துக்குக் கொண்டு வந்த எம்சிஎம்சி என்ற மலேசியப் பல்லூடக, தொடர்பு ஆணையத்துக்கு என் மனமார்ந்த நன்றி.

அவர்கள் அதனைத் தடை செய்திருக்கா விட்டால் அத்தகைய வீடியோ ஒன்று இருப்பது கூட எனக்குத் தெரிந்திருக்காது . அந்த வீடியோவில் நல்ல முறையில் நடித்துள்ள அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

டாக்: திரைப்படத் தணிக்கையாளர்கள் ‘இன்னும் அங்கீகரிக்காத’ வீடியோவை நான் பார்த்தேன். அம்னோ/பிஎன் ஏன் அது குறித்து மகிழ்ச்சி அடையவில்லை என்பது எனக்குத் தெரிகிறது.

மலேசிய பிரச்னைகளை எதிர்நோக்குவதாக ரசாலி கூறுவது, அம்னோ/பிஎன் -னுக்கு ஏற்புடையது அல்ல.

எல்லாவற்றுக்கும் மேலாக மலேசியா தனது ஆட்சியின் கீழ் நனி சிறந்த நாடாக அம்னோ பிஎன் சித்தரித்துக் கொண்டிருக்கிறது. எல்லாம் சீராக இருப்பதாக கற்பனை செய்து கொண்டு அது காட்டும்  காட்சிக்கு மாறுபாடாக ரசாலியின் கூற்று அமைந்துள்ளது.

கேகன்: பொதுச் சேவை அறிவிப்பு ஒன்றுக்கு திரைப்படத் தணிக்கை வாரிய அனுமதி தேவையா ? உண்மையில் அது எனக்கு புதிய செய்தியாகும். டிவி8ல் காட்டப்பட்ட இனவாத ரீதியில் அவமானப்படுத்தும் நோன்புப் பெருநாள் செய்தி பற்றி என்ன சொல்வது ? அதுவும் அங்கீகரிக்கப்பட்டதா ?

வீரா: அந்த வீடியோ திரையிடப்படுவதற்கு அனுமதிக்கப்படும் என நான் பந்தயம் கட்டுகிறேன். ஆனால் இப்போது அல்ல. அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர்.

டூட்: அந்த வீடியோவில் கட்சி சார்புடைய விஷயங்கள் ஏதுமே இல்லை. அம்னோவை, அதிகாரத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சம் வாட்டுகிறது. அதனால் அது தனது சொந்த நிழலைக் கண்டு கூட பயப்படுகிறது.

அபாசிர்: டத்தோ டி மூவர் வெளியிட்ட செக்ஸ் வீடியோவை ஒளிபரப்புவதற்கு முன்னர் டிவி3 திரைப்படத் தணிக்கை வாரியத்தின் அனுமதியைப் பெற்றதா ?

அடையாளம் இல்லாதவன்_5fb: அந்த வீடியோவில் காட்சி அளிக்குமாறு ரோஸ்மா மான்சோரை அழைக்க பீட் தியோ ஒரு வேளை  மறந்திருக்கலாமோ ? 

இருந்தாலும் கூட தாயன்புடனும் பாட்டி உணர்வுடனும் ரோஸ்மா வழங்கும் அறிவுரைகள் டிவி3லும் மற்ற தொலைக்காட்சிகளும் நிறைந்திருக்கின்றன. அவை போதாதா ? ‘Undilah’ வீடியோவிலும் தோன்ற அவர் விரும்புகிறாரா ?