ஜூலை மாதம் மலேசிய முழுக்க சொத்து மேம்பாட்டாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் பாதிக்கு மேற்பட்டோர் கட்டுமானப் பொருள்களின் விலை உயர்ந்திருப்பதால் சொத்துவிலை அதிகரிக்கும் என்று நினைக்கிறார்கள்.
ஆய்வில் பங்குகொண்வர்களில் பாதிக்கு மேற்பட்டோர், இவ்வாண்டு மேம்பாட்டு பணிகளைத் தொடங்கும்போது சொத்து விலைகளை 15 விழுக்காடு அதிகரிக்க எண்ணம் கொண்டிருப்பதாகக் கூறினார்கள் என மலேசிய சொத்து, வீடமைப்பு மேம்பாட்டாளர் சங்கம் (ரெஹ்டா) கூறுகிறது.
ஆய்வில் கலந்துகொண்ட 147 பேரில் 65 விழுக்காட்டினர், ஆண்டின் இரண்டாம் பாதியில் விலைகள் பொதுவாக 20 விழுக்காடு உயரும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்கள்.
கட்டுமானப் பொருள்களுக்கு ஆகும் செலவுதான் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்று கோலாலம்பூர் ரெஹ்டா தலைவர் என்.கே.தோங் இன்று பெட்டாலிங் ஜெயாவில் கூறினார்.
2010-உடன் ஒப்பிடும்போது எஃகு விலை 13 விழுக்காடு உயர்ந்து டன்னுக்கு ரிம2,529 ஆகியுள்ளது. 2010-இல், ஒரு பைக்கு ரிம15.64 ஆக இருந்த சிமெண்ட் விலை 4 விழுக்காடு உயர்ந்துள்ளது. செங்கல் 27 விழுக்காடு உயர்வு கண்டுள்ளது.