600,000 ரிங்கிட் அம்னோ தரத்தில் கொசுறு தான்

“அது 600,000 ரிங்கிட் அல்லது 6 மில்லியன் ரிங்கிட்டாக இருந்தாலும் அலி ரூஸ்தாமுக்கு அந்தப் பணம் எங்கிருந்து கிடைத்தது ? தமது வாழ் நாள் சேமிப்பு முழுவதையும் அவர் முடித்து விட்டாரா?

முதலமைச்சர்: என் புதல்வர் திருமணம் ஆடம்பரமானது அல்ல

எம்எப்எம்: இங்கு ஒரு விஷயத்தை கவனியுங்கள். மலாக்கா முதலமைச்சர் முகமட் அலி ரூஸ்தாமின் சிறப்புச் செயலாளர் கூற்றுப்படி, உணவு பரிமாறும் நிறுவனங்களும் மற்ற வர்த்தகங்களும் தங்கள் சேவைகளை ‘இலவசமாக’ வழங்கின.

முதலமைச்சர் என்ற முறையில் அலி ரூஸ்தாம் பரிசுகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அது லஞ்சமாகக் கருதப்படலாம். ஆனால் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. காரணம் ‘பழைய சட்டம்’, ‘மாநிலத் தலைவர்களைப்’ பாதுகாக்கிறது. 

ஒரு திருமணத்துக்கு 600,000 ரிங்கிட் என்பதே மிகவும் ஆடம்பரமானது. கீழ் நிலை நடுத்தர வர்க்க திருமணத்துக்கு வழக்கமாக 100,000 ரிங்கிட் செலவாகும். மலாக்கா முதலமைச்சர் புதல்வர் திருமணத்தைப் பொறுத்த வரையில் உணவு வகைகளுக்கு அவற்றை பரிமாறுவதற்கு மட்டும் அதை விட ஆறு மடங்கு செலவாகியுள்ளது.

மலேசியர்கள் 6 மில்லியன் ரிங்கிட் திருமணத்தைப் பார்க்க விரும்பினால் கவலைப்பட வேண்டாம். பாசத்துக்குரிய நமது தலைவர் நஜிப் ரசாக்கை தொடர்ந்து பிரதமராக இருக்க நாம் அனுமதித்தால் அவர் தமது அன்புள்ள புதல்விக்கு அதனைச் செய்வார்.

சின்ன அரக்கன்: பிஎன் அரசியல்வாதிகள் தங்கள் குடும்ப நிகழ்வுகளுக்கு நூறாயிரக்கணக்கான ரிங்கிட்டை செலவு செய்து விட்டு அவை ‘மிகவும் ஆடம்பரமானவை’அல்ல’ என துணிச்சலுடன் சொல்வது வினோதமாக இருக்கிறது.

அவர்கள் நாடு முழுவதும் சென்று சிக்கனமாக செலவு செய்யுமாறு மக்களுக்குப் போதித்து வருகின்றனர்.

‘எடுத்துக்காட்டுத் தலைமைத்துவம்’ என்பதைக் காட்டுவதற்கு இதுதான் பிஎன் வழியோ என்னவோ ?’

இதே வேகத்தில் போனால் சில பிஎன் அரசியல்வாதிகள் ” மாபெரும் குடும்ப நிகழ்வுகளுக்கு” ஏற்பாடு செய்து தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற முனையக் கூடும்.

2020ல் ‘முழு வளர்ச்சி அடைந்த நாடாக’ மலேசியா திகழ்வதற்கு அதுதான் மலேசியாவுக்குத் தேவை.

அதே வேளையில் அந்த 600,000 ரிங்கிட்டில் பத்தில் ஒரு பங்கு செலவில் தமது புதல்வர் அல்லது புதல்வியின் திருமணத்துக்குச் செலவு செய்யும் எதிர்க்கட்சி அரசியல்வாதியை வேட்டையாட அந்த பிஎன் அரசியல்வாதிகள் தயங்க மாட்டார்கள்.

அத்துடன் அந்த எதிர்க்கட்சி அரசியல்வாதி தமது குடும்ப நிகழ்வுக்கு எப்படி ‘அந்த கொசுறுப் பணத்தை” செலவு செய்தார் என்பதை ‘முழுமையாக ஆராயுமாறு’ எம்ஏசிசி-யையும் அவர்கள் கேட்டுக் கொள்வார்கள்.

சிஎஸ் யாப்: “500 பேர் அங்கு தொண்டு அடிப்படையில் வேலை செய்தனர் என்றும் உணவு பரிமாறும் நிறுவனங்களும் மற்ற வர்த்தகங்களும் தங்கள் சேவைகளை ‘இலவசமாக’ வழங்கின,” என்று அலியின் சிறப்புச் செயலாளர் எம்எஸ் மகாதேவன் கூறியுள்ளார். எனக்கு கதை சொல்ல வேண்டாம்.

ஜெரார்டு லூர்துசாமி: அது 600,000 ரிங்கிட் அல்லது 6 மில்லியன் ரிங்கிட்டாக இருந்தாலும் அலி ரூஸ்தாமுக்கு அந்தப் பணம் எங்கிருந்து கிடைத்தது ? தமது வாழ் நாள் சேமிப்பு முழுவதையும் அவர் முடித்து விட்டாரா ?

எல்லா ஆதரவாளர்களும் தங்கள் சேவையை இலவசமாக வழங்கியுள்ளனர். அவர்களுக்கு அதற்கு ஈடாக அவரிடமிருந்தும் மாநில அரசாங்கத்திடமிருந்தும் என்ன கிடைத்தது ? அவர் முதலமைச்சராக இருப்பதால்தான் அவர்கள் அந்த நிகழ்வுக்கு ஆதரவு அளித்தனர். எம்ஏசிசி விசாரிப்பதற்கு அது போதாதா ?

கேஎஸ்என்: 600,000 ரிங்கிட் ஒரு திருமண விருந்துக்கு மலிவானதா ? அம்னோ தரத்தில் எதுதான் அதிக விலையுள்ள விருந்து ?

 

TAGS: