சொய் லெக்: ஹூடுட் அமலுக்கு வந்தால் 1.2 மில்லியன் பேர் வேலை இழப்பர்

மசீச தலைவர் சுவா சொய் லெக், பாஸ் மலேசியாவில் ஹுடுட்டை அமல்படுத்தினால் 1.2 மில்லியன் பேர் வேலை இழப்பர் என்று அனாமதேய குறுஞ்செய்தி ஒன்றை மேற்கோள் காட்டிக் கூறியுள்ளார்.

ஹூடுட் அமலாக்கத்தால், கெந்திங் மலை சூதாட்ட விடுதி, பந்தயக் கட்டும் இடங்கள், உடம்புப் பிடி நிலயங்கள் போன்ற இடங்களில் பணி புரியும் பலர் வேலை இழப்பர் என்று சுவா தெரிவித்தார்.

அவரது வலைப்பதிவில் இடம்பெற்றிருந்த காணொளி ஒன்றிலும் முக நூலிலும் இதைக் குறிப்பிட்ட சுவா, இன்று காலை கிடைத்த குறுஞ்செய்தியில் உள்ள விவரங்களின் அடிப்படையில்  அவ்வாறு கூறுவதாகவும் தெரிவித்தார்.

ஆனால்,  குறுஞ்செய்தி அனுப்பியவர் யார் என்பது அவருக்குத் தெரியவில்லை. அந்த எண்ணுக்கு அழைத்தபோது எவரும் பதிலளிக்கவில்லை என்றாரவர்.

“மசீச ஹூடுட் பற்றிப் பேசுகிறதே தவிர ஹூடுட் கடுமையாக அமலாக்கப்பட்டால் இழக்கப்படும் வேலைகள் பற்றி அது பேசுவதில்லை என்று அக்குறுஞ்செய்தி கூறியது”, என்று சுவா தெரிவித்தார்.

“ஹூடுட் கடுமையாக அமலாக்கப்பட்டால் சுமார் 1.2 மில்லியன் பேர் வேலை இழப்பர் என்று அவர் கூறியிருந்தார்”.

TAGS: