நீங்கள் என்ன சொன்னாலும் அது உங்களுக்கு எதிராகப் பயன்படுத்திக்கொள்ளப்படும்

“உயர் அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதி என்ற முறையில் பினாங்கு முதலமைச்சர் இதை என்றும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.”

 

குவான் எங்: சிங்கப்பூர் பேச்சு ஒரு தனிப்பட்ட உரையாடல்

நியாயவான்: உயர் அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதியான பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்குக்குத் தனிப்பட்ட கருத்தையும் அதிகாரப்பூர்வ கருத்தையும் பிரித்துப் பார்ப்பது சிரமம் என்பது தெரிந்திருக்க வேண்டும். அது, வசதிக்குத் தக்கபடி திரித்துக்கூறப்படும்.

விழிப்பானவன்: தனிப்பட்ட முறையில் சொல்லப்பட்டதா அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட்டதா என்ற அளப்பெல்லாம் வேண்டாம். எந்தச் சூழல் சொல்லப்பட்டது என்பதைச் சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருக்க வேண்டும்.

இது ஒரு சாதாரண விசயம். சொல்லப்போனால், உண்மை நிலவரத்தைக் குறிக்கும் ஒரு நியாயமான கருத்துத்தான். சொன்னதை ஒப்புக்கொள்வதால் ஜோகூரில் பக்காத்தான் ரக்யாட்டுக்குள்ள ஆதரவு ஒன்றும் குறைந்து போகாது.

அக்குமலாயு: வீண் ஜம்பத்துக்காக லிம் அடம் பிடிப்பதைக் கண்டு வருத்தப்படுகிறேன்.

உண்மையை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்பது அவருக்கு சாதகமாகத்தான் இருக்கும். அது அவர் ஒரு பொறுப்புள்ள தலைவர் என்ற தோற்றத்தையும் உருவாக்கும்.ஆனால், மன்னிப்பு என்பது மிகக் கடினமான சொல்லாக அவருக்குத் தெரிகிறது.

அபாசிர்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்த என்கேஆர்ஏ(நாட்டின் முக்கிய அடைவுநிலை பகுதிகள்)-இல், பாதுகாப்பும் ஒன்று. அதுவே நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறது.

அதை வைத்து நாட்டை இழித்துரைக்கிறார், போலீஸ்படை திறமையற்றது என்கிறார் என்று அவரை கண்டிக்கலாமா?

கிட் பி: மாநில முதலமைச்சமராக உள்ள லிம், அம்மாநிலத்தை எவ்வகையிலும் கைப்பற்ற பிஎன் கங்கனம் கட்டிக் கொண்டிருப்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும். உங்களைப் பொறுத்தவரை தனிப்பட்ட கருத்து என்ற பேச்சுக்கெல்லாம் இடமில்லை.

நீங்கள் என்ன சொன்னாலும்- ஏன் எதுவும் சொல்லாவிட்டாலுங்கூட- அது உங்களுக்கு எதிராகப் பயன்படுத்திக்கொள்ளப்படும்.

ஒரு செய்தியாளர் வெளியில் செல்லும்போது ஒலிப்பதிவுக் கருவியைத் தொடர்ந்து செயல்பட விட்டுச் செல்வது ஒரு பழைய தந்திரம்.

பெயரிலி:அந்த அறிக்கை கண்டு ஆத்திரமடைந்த ஜோகூர்காரரான துணைப் பிரதமர் முகைதின் யாசின், லிம் ஜோகூர் முதலீடு செய்வதற்குப் பொருத்தமற்ற  மாநிலம் என்று கூறி கீழறுப்புச் செய்கிறார் என்று குறிப்பிட்டாராம்

சில நாள்களுக்குமுன்பு, முகைதின், பக்காத்தான் அரசின்கீழ் உள்ள சிலாங்கூர் “சித்திரவதை”க்கு உள்ளாகி தொல்லைப்படுவதாகக் கூறினார்.

இது, சிலாங்கூர் முதலீடு செய்வதற்குப் பொருத்தமற்ற  மாநிலம் என்று கூறி கீழறுப்புச் செய்வதாகாதா?

உடல் தகனம்: உறவினர்களை ஷியாரியா நீதிமன்றம் கொண்டு செல்ல முடியாது

டூரியான்: ஹூடுட் பற்றிய சர்ச்சையில் மசீசவும் கெராக்கானும் மஇகாவும் கிறுக்குப் பிடித்தவர்கள் மாதிரி சத்தம் போட்டார்கள். ஆனால், இந்த விசயம் பற்றி வாயே திறக்கவில்லை.

பால் வாரன்: இரண்டு வகை சட்டங்களையும் இணைப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது. ஆனால், அதற்கான முயற்சியை அம்னோ முன்னெடுக்க வேண்டும். அப்போது மசீசவும் கெராக்கானும் மஇகாவும் முந்திக்கொண்டு ஆதரவு கொடுக்கும்.

Zz2XX: காலஞ்சென்றவர் மதம் மாறினார் என்பதைக் காண்பிக்கும் ஆதாரங்களை நெகிரி செம்பிலான் இஸ்லாமிய சமய விவகாரத் துறை வெளியிட வேண்டும். ஆதாரங்கள் உறுதியானவையாக இருக்க வேண்டும். இறந்தவர் உடலைப்  பறித்துச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

ஒருவர் மதம் மாறிவிட்டார் என்று கூறப்படுகிறது.ஆனால், அவரோ இன்னொரு சமயச் சடங்குகளை எல்லாம்  தொடர்ந்து செய்து வருகிறார்; பலரும் அதற்குச் சாட்சியம் கூறுகின்றனர். பின் எப்படி அவரை மதமாறியவர் என்பது.

அரசாங்கம், மதம் மாறுவோர் அது பற்றித் தங்கள் குடும்பத்தாருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் குடும்ப உறுப்பினர் ஒருவரைச் சாட்சியாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் சட்டம் கொண்டுவர வேண்டும்.

TAGS: