’13வது பொதுத் தேர்தல் நெருங்குகிறது, பக்காத்தானும் ஹிண்ட்ராப்-பும் முடிவு செய்ய வேண்டும்’

‘ஹிண்ட்ராப் அதன் தலைவர்களுடைய கர்வம், தற்பெருமை காரணமாக வெளியில் இருக்க முடிவு செய்தால் அது தாங்கள் பாதுகாப்பதற்காக போராடுவதாகக் கூறிக் கொள்ளும் இந்தியர்களை கை விட்டதற்கு ஒப்பாகும்’

ஹிண்ட்ராப்-பக்காத்தான் இணக்கம்: சரியான நேரத்தில் போடப்பட்ட முடிச்சு

பெர்ட் தான்: பி உதயகுமார் ஹிண்ட்ராப்பை வழி நடத்திய போது அதனை தனிமைக்குள் கொண்டு சென்றார். நாட்டின் அரசியல் அரங்களில் அது பொருத்தமற்றதாகி வந்தது. தனி நபர்களுக்கு எதிராக குறிப்பாக இந்தியர்களுக்கு எதிராக போலீஸ் அல்லது அமலாக்க அதிகாரிகளின் அத்துமீறல்களை பிரதிநிதிக்கும் போது மட்டும் ஊடகங்களிடமிருந்து சிறிதளவு விளம்பரத்தை ஹிண்ட்ராப் பெற்று வந்தது.

தேசிய நீரோட்டத்தில் ஒர் ஆட்டக்காரராக இருக்க ஹிண்ட்ராப் விரும்புகிறதா அல்லது சிறிய குட்டையில் பெரிய மீனாக இருக்க விரும்புகிறதா ?

நாடு முழுவதும் மாற்றத்திற்கான அலை வீசிக் கொண்டிருக்கிறது. ஹிண்ட்ராப் அதன் தலைவர்களுடைய கர்வம், தற்பெருமை காரணமாக வெளியில் இருக்க முடிவு செய்தால் அது தாங்கள் பாதுகாப்பதற்காக போராடுவதாகக் கூறிக் கொள்ளும் இந்தியர்களை கை விட்டதற்கு ஒப்பாகும்.

பக்காத்தான் தலைவர்களுக்கும் அது ஒரளவு பொருந்தும். ஒத்துழைப்பு இல்லாவிட்டால் பக்காத்தான் பாதிக்கப்படலாம். ஆனால் அது பேரிடராக இருக்காது.

பிஎன் -னை எதிர்க்கும் தலைவர்கள் தங்கள் சொந்தப் பூசலை ஒதுக்கி விட்டு ஒன்றுபட வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.

ஹிண்ட்ராப் நோக்கங்கள் பக்காத்தான் எண்ணங்களுடன் இணைந்து போகுமா என்பது நமக்கு நிச்சயமாகத் தெரியாது. இந்த கடைசி நேரத்தில் கூட அவை இன்னும் முடிவு செய்யவில்லை.

நாம் அவர்களுக்கு நினைவுபடுத்துவோம். நம்மைக் காட்டிலும் பெரிய விஷயம் ஒன்றில் நாம் இணைந்துள்ளோம். எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கும் ஹிண்ட்ராப் வேதமூர்த்திக்கும் இடையிலான சந்திப்பு நல்ல சகுனமாகும்.

காந்தி: டெரன்ஸ் நெட்டோ அவர்களே, பெர்சே தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனுக்கும் ஹிண்ட்ராப்பின் உதயகுமாருக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை நீங்கள் புரிந்து கொள்ளாதது எனக்கு ஏமாற்றம் தருகின்றது.

அம்பிகா தேர்தல் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்துகிறார். இந்தியர்கள் ஒதுக்கப்படுவதற்கும் அவரது பணிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதே வேளையில் உதயகுமார் ஏழை இந்தியர்களுக்காக போராடுகின்றார்.

என்றாலும் அவர்கள் இருவரும் மனுக்குலத்திற்கு சிறந்த சேவையாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஹிண்ட்ராப் பிரதேசத்துக்குள் அம்பிகா ஊடுருவியிருப்பதாக சொல்வது உங்கள் கற்பனையே.

உதயகுமார் குறுகிய கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கலாம். ஆனால் தமது கொள்கைகளைக் கை விடவில்லை.  சொகுசான வாழ்க்கைக்காக  சில கட்சிகளில் சேர்ந்தவர்களைப் போல அல்ல அவர்.

பாலா செல்லையா: ஒரங்கட்டப்பட்ட அனைத்துப் பிரிவுகளும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. ஆகவே ஒதுக்கப்பட்ட நாடற்ற இந்தியர்களுடைய பிரச்னைகளை  எடுத்துக் கொண்டு ஹிண்ட்ராப் போராடுவதில் என்ன தவறு ?

சுதந்திரமான நியாயமான தேர்தல்களுக்கு பெர்சே-யும் அம்பிகாவும் போராடுகின்றனர். அதனால் ஹிண்ட்ராப் ஏன் மருட்டப்படுவதாக உணர வேண்டும் ?

ஆனால் சௌகரியமாக வாழும் சுய நலப் போக்குடைய நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இந்தியர்கள் ஒதுக்கப்பட்ட இந்தியர்களுடைய நலன்களுக்கு உதவ விரும்பவில்லை என அவர் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

சுயநலமற்ற ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி போன்றவர்கள் மட்டுமே தமக்கும் தமது இயக்கத்துக்கும் எதிராக சுமத்தப்படும் குற்றசாட்டுக்களை பொருட்படுத்தாமல் போராட முடியும்.

கிம் குவேக்: அருமையான ஆய்வு. நன்கு விளக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் எந்த ஒரு சீர்திருத்த அமைப்புக்கு அது நல்ல செய்தி ஆகும்.

இந்த நாட்டில் இந்தியர்கள் உட்பட எந்த ஒர் இனத்தின் நலனும் நியாயமான, பாகுபாடு காட்டாத, திறமையான ஆளுமையை சார்ந்துள்ளது. நமது இன்றைய சீரழிவுக்கு எல்லாத் துறைகளிலும் இனத்தை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டதே காரணமாகும்.

நாம் ஒரு நாடு என்னும் முறையில் உயிர்வாழ வேண்டுமானால் அதனைக் கைவிட வேண்டும். மீண்டும் அந்தக் கொள்கைக்குச் செல்லக் கூடாது.

இனவாத எதிர்ப்பாளன்: தொட்டில் முதல் கல்லறை வரையில் போடப்படும் பிச்சைகளினால் அறிவாற்றல் மழுங்கி  விட்டது. சிலர் சிந்திக்கும் தன்மையையே இழந்து விட்டனர். உலக மயம் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். பால் ஊட்டும் போத்தல் உணர்விலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்.

GXFC: மலாய்க்காரர்கள் கடந்த காலத்துக்கு வாக்களிப்பர். இந்தியர்கள் நடப்பு நிலைக்கு வாக்களிப்பர். சீனர்கள் எதிர்காலத்துக்கு வாக்களிப்பர் என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.