‘ஹுடுட் முக்கியமல்ல எனக் கருதுகின்றவர்கள் குழம்பியுள்ளனர்’

அரசியல் ஒத்துழைப்பு கண்ணோட்டத்தில் ஹுடுட் பிரச்னையை விவாதிக்கக் கூடாது என எண்ணும் பாஸ் கட்சி உறுப்பினர்கள் உண்மையில் குழப்பம் அடைந்துள்ளனர் என அக் கட்சியின் உலாமாப் பிரிவுத்  தலைவர் ஹருண் தாயிப் கூறுகிறார்.

அவர்கள் கட்சியின் போதனைகளையும் புரிந்து கொள்ளத் தவறி விட்டனர் என்றார் அவர்.

“ஹுடுட் விவகாரத்தில் கட்சிக்கு வெளியிலிருந்து பல வகையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அரசியல் ஒத்துழைப்புக்கான கால கட்டத்தில் ஹுடுட்டை விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என எண்ணும் குழப்பமடைந்துள்ள உறுப்பினர்களும் இருக்கின்றனர்,” என ஹருண் தாயிப் சொன்னார்.

“இது குழப்பமடைந்துள்ள சிந்தனைகளைப் பிரதிபலிக்கின்றது. காரணம் அவர்கள் பாஸ் போதனைகளை பின்பற்றத் தவறி விட்டதாகும். ஹுடுட்டை நிலை நிறுத்தும் எங்கள் போராட்டம் இஸ்லாமிய நோக்கத்தைப் பிரதிபலிக்கின்றது. அது உறுதியாக பாஸ் எண்ணமாகும்.”

மற்ற பக்காத்தான் ராக்யாட் தோழமைக் கட்சிகளுடன் ஒத்துழைப்பை நாடும் போது ஹுடுட் விஷயத்தைப் பின்னுக்குத் தள்ளி விட்ட உறுப்பினர்களையே ஹருண் தாயிப் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகும்.

TAGS: