ஜெலாபாங் தொகுதியை ஹீ-யிடம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுவதை மசீச மறுக்கின்றது

பேராக், ஜெலாபாங் தொகுதியை அதன் நடப்பு சுயேச்சை பிரதிநிதியான ஹீ யிட் போங் ஆளும் கட்சிக் கொடியின் கீழ் போட்டியிடுவதற்கு உதவியாக அவரிடம் வழங்குவதற்கு பிஎன் இணக்கம் கண்டுள்ளதாக கூறப்படுவதை மசீச தலைவர் சுவா சொய் லெக் மறுத்துள்ளார்.

“பேராக் ஜெலாபாங் சட்டமன்றத் தொகுதியை விட்டுக் கொடுப்பது மீது பிரதமருடன் கட்சி எந்த விவாதமும் நடத்தவில்லை என்பதை மசீச தெளிவுபடுத்த விரும்புகிறது,” என சுவா இன்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.

“மசீச-வின் கீழ் எந்த வெளியாரையும் அந்தத் தொகுதியில் நிறுத்துவதற்கு அனுமதிக்கும் விவாதம் எதனையும் ஜெலாபாங் அம்னோ தொகுதியோ அல்லது நானோ நடத்தவில்லை,” என்றார் அவர்.

“பிஎன் கொடியின் கீழ்” தாம் பேராக்கில் மீண்டும் போட்டியிடப் போவதாகவும் அதற்கான விவரங்களை பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் விரைவில் அறிவிப்பார் என்றும் ஹீ நேற்று விடுத்த அறிக்கைக்கு சுவா பதில் அளித்தார்.

2008 தேர்தலில் டிஏபி டிக்கெட்டில் ஜெலாபாங் தொகுதியை வென்ற ஹீ, பக்கத்தான் பேராக் அரசாங்கத்தை பிஎன் கைப்பற்றுவதற்கு உதவியாக பிஎன் நட்புறவு உறுப்பினராக மாறினார்.

TAGS: