பிரஞ்சு வழக்குரைஞர்களுடைய வருகை மீது மௌனம் சாதிக்கும் அமைச்சரை சுவாராம் சாடுகிறது

இரண்டு பிரஞ்சு வழக்குரைஞர்கள் இந்த நாட்டுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட மாட்டாது என உறுதி அளிக்கத் தவறியுள்ள உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனை மனித உரிமை போராட்ட அமைப்பான சுவாராம் சாடியுள்ளது.

“அவர்கள் நாட்டுக்குள் வருவதைத் தடுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. அந்த விவகாரம் மீது அமைச்சர் ஏன் எங்களை இருட்டில் வைக்கிறார் என்பது புரியவில்லை,” என சுவாராம் வாரிய இயக்குநரான சிந்தியா கேப்ரியல் கூறினார்.

இரண்டு ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிகள் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுவது மீது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்குவதற்காக வில்லியம் போர்டோன், ஜோசப் பிரெஹாம் என்ற அந்த இரு வழக்குரைஞர்களும் புதன் கிழமை கோலாலம்பூருக்கு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அழைத்துள்ள அவர்கள் ஸ்கார்ப்பின் விவகாரம் தொடர்பில் பிரஞ்சு நீதி பரிபாலன முறை மீது பேசுவார்கள்.

“அந்த வழக்குரைஞர்கள் புதன் கிழமை இங்கு வரவிருக்கின்றனர். மலேசியாவிற்குள் அவர்கள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என சுவாராம் விரும்புகின்றது,” என்றும் சிந்தியா சொன்னார்.

“அடிப்படை ஏதும் இல்லாததால் அரசாங்கம் அவர்கள் நுழைவதைத் தடுக்க முயலாது என நாங்கள் நம்புகிறோம்.”

நாடாளுமன்றத்தில் இரு தரப்பையும் சேர்ந்த உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்க அந்த வழக்குரைஞர்கள் எண்ணியுள்ளனர்,” என்றார் அவர்.

சுவாராம், மலேசியாவுக்கு 7.3 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இரண்டு நீர்மூழ்கிகளை விற்ற பிரஞ்சு நிறுவனமான டிசிஎன்எஸ் ஆகியவற்றுக்கும் அழைப்புக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு போர்டோன் கோலாலம்பூருக்கு மேற்கொண்ட பயணம் அவர் விசா நிபந்தனைகளை மீறியதற்காக நாட்டிலிருந்து இடையில் தடைபட்டு அவர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதால் அவர்கள் இந்த முறை பாதுகாப்பாக நாட்டுக்குள் நுழைவதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என சுவாரம் விரும்புகின்றது.

அந்த இரண்டு பிரஞ்சு வழக்குரைஞர்களும் நாட்டுக்குள் நுழைவதிலிருந்து தடை செய்யப்படுவார்களா என்னும் கேள்விக்கு ஹிஷாமுடின் அளித்த பதில் மீது சிந்தியா கருத்துரைத்தார்.

அந்த விவகாரம் மீது குடி நுழைவுத் துறையும் போலீசும் தமக்கு அண்மைய தகவல்களைத் தெரிவிக்கவில்லை என ஹிஷாமுடின் கூறியிருந்தார்.

தாம் விவரமாக அறிக்கையைக் கோரியுள்ளதாகவும் ஆட்சேபாம் ஏதும் இருந்தால் அதற்கு வலுவான காரணங்கள் இருக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் சொன்னார்.

“ஆகவே நடப்பு நடைமுறைகளுக்கு ஏற்ப நான் அந்த விஷயத்தை சம்பந்தப்பட்ட அமைப்புக்களிடம் விட்டு விடுகிறேன். முடிவு எதுவாக இருந்தாலும் அதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம்.”

 

TAGS: