மலேசியாவில் இலவசப் பல்கலைக்கல்வியை வழங்குவது மீது அரசியல்வாதிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள வேளையில் பிடிபிடிஎன் என்ற தேசிய உயர் கல்வி கடன் நிதி நிறுவனத்துக்கு வர வேண்டிய கடன்கள் அளவு பெருகிக் கொண்டே போகின்றன.
2012 ஆகஸ்ட் 31 வரை அங்கீகரிக்கப்பட்ட மொத்தம் 45.41 பில்லியன் ரிங்கிட் கடன்களில் பெரும்பகுதியை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்துக்கு அணுக்கமான வட்டாரங்கள் கூறின. காரணம் அந்தக் கடன்களைப் பெற்ற மாணவர்களைக் கண்டு பிடிக்க முடியாமல் இருப்பதாகும்.
எல்மாஸ் என அழைக்கப்படும் கல்விக் கடன் நிர்வாக முறையில் சேர்க்கப்பட்டுள்ள மின்னியல் புள்ளி விவரங்கள் காலத்திற்கு ஒவ்வாததாகி விட்டன. அதனால் திருப்பிச் செலுத்தப்படாத கடன்களை மீட்கும் வாய்ப்பு அருகி வருகின்றது.
2012 ஆகஸ்ட் 31 வரை 1.14 மில்லியன் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கடன்களில் 7.83 பில்லியன் ரிங்கிட் இன்னும் திரும்ப வசூலிக்கப்படவில்லை. கடனைத் திருப்பிச் செலுத்தும் மாணவர் விகிதம் இன்னும் 49 விழுக்காடாகவே இருந்து வருகின்றது.
1.5 மில்லியன் ரிங்கிட் செலுத்தப்பட்டும் கடன்களை மீட்பதற்கான முறையை மேம்படுத்தத் தவறிய நிதி அமைச்சின் துணை நிறுவனமான புரோஹாஸ் சென் பெர்ஹாட் 2009 தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையைத் தொடர்ந்து அகற்றப்பட்டது.
புரோஹாஸ் அதனைச் செய்யத் தவறியதைத் தொடர்ந்து மீண்டும் எல்மாஸ் முறையைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த எல்மாஸ் போதுமானது அல்ல என 2006ம் ஆண்டிலேயே முடிவு செய்யப்பட்டது.
அடுத்து அந்த வேலையை மீண்டும் செய்வதற்கு எல்மாஸ் முறையை உருவாக்கிய Paradigm Systems Sdn Bhdக்கு 26 மில்லியன் ரிங்கிட்டை Paradigm Systems Sdn Bhd கொடுக்க வேண்டும். ஆனால் அந்தச் செலவுகளை உறுதிப்படுத்த பிடிபிடிஎன் தலைமை நிர்வாக அதிகாரி அகோஸ் சோலான் தயங்குகிறார்.
காலத்திற்கு ஒவ்வாததாகி விட்ட புரோஹாஸ் முறையை சீர்படுத்துவதோடு புதிய முறையை உருவாக்குவதற்கும் தேவையான வன்பொருள் சாதனங்களை வழங்குவதற்கும் அவ்வளவு பெரிய தொகையை Paradigm கோருவதாகச் சொல்லப்படுகின்றது.
இதனிடையே பேரிடர் காத்திருக்கிறது
நாடாளுமன்ற பதிவேடுகளின் படி பிடிபிடிஎன் -க்கு மாணவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்கள் அளவு பெருகுகிறது. அது எந்த நேரத்திலும் பேரிடராக மாறலாம் எனத் தெரிகின்றது.
மின்னியல் கடன் நிர்வாக முறை ஏதுமில்லாமல் 1997ம் ஆண்டு பிடிபிடிஎன் தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது. ‘கோப்புக்கள்’ அடிப்படையில் பதிவுகள் செய்யப்பட்டன. 2003ம் ஆண்டு வரையில் அது பல வகையான கணினி முறைகளை சோதனை செய்தது.
பல தவறுகள் நிகழ்ந்த போதிலும் பிடிபிடிஎன் தனது புள்ளி விவரங்களை அழிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அதனால் புதிய முறைக்கு எளிதாக அவற்றை மாற்றி விடலாம்.
புரோஹாஸ் முறையுடன் ஒப்பிடுகையில் எல்மாஸ் முறை சிறந்ததாகத் தோன்றுகிறது என முன்னாள் வங்கி அதிகாரியான அகோஸ் சொன்னார்.
“இப்போது மக்கள் இணையத்துக்குச் சென்று தாங்கள் இன்னும் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் அளவை அறிந்து கொள்ள முடியும்.”
“இதற்கு முன்னதாக 5 பில்லியன் ரிங்கிட் கடன்களைப் பற்றி எதுவும் தெரியாமல் இருந்தது. யார் கடன் எடுத்தார்கள் யார் திருப்பிக் கொடுத்தார்கள் என்பது கூடத் தெரியாமல் இருந்தது. எண்கள் அங்கு இல்லை.
ஆனால் இப்போது அவை அனைத்தும் சரி செய்யப்பட்டு விட்டன,” என்றார் அவர்.
புதிய முறை 2013ம் ஆண்டு முழுமையாகத் தயாராகி விடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஆனால் பராமரிப்பு மேம்படுத்துவது ஆகியவற்றுக்கான Paradigm ஒப்பந்தத்தை புதுப்பிப்பது பிடிபிடிஎன் -னுடைய உரிமை ஆகும்.
“இன்னும் பலவீனங்கள் உள்ளன. இருந்தாலும் 2014க்குள் புதிய அம்சங்கள் அதில் இணைக்கப்படும் என நாங்கள் நம்புகிறோம்.”
பிடிபிடிஎன் -னுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்த விவரங்களை வெளியிடக் கூடாது என அந்த ஒப்பந்த விதிகள் கூறுவதால் அந்த விவகாரம் மீது கருத்துரைக்க Paradigm மறுத்து விட்டது.