1992க்கும் 2012 ஆகஸ்ட் மாதத்திற்கும் இடையில் மொத்தம் 81,950 பேர் தங்கள் மலேசியக் குடியுரிமையை கைவிட்டுள்ளதாக இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
அந்த எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரி 4,097 பேர் குடியுரிமையை கைவிடுவதைக் குறிக்கிறது.
அந்தத் தகவலை உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன், புக்கிட் குளுகோர் எம்பி கர்பால் சிங் தொடுத்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரத்துக்குப் பின்னர் 106,000 பேர் தங்கள் குடியுரிமை கைவிட்டுள்ளதாக மக்களவையில் 2007ம் ஆண்டு தெரிவிக்கப்பட்டது.
ஈராயிரத்தாவது ஆண்டுக்கும் 2006ம் ஆண்டுக்கும் இடையில் குடியுரிமையைக் கைவிட்டவர்களில் பெரும்பாலோர் சீனர்கள் என்றும் அடுத்து மலாய்க்காரர்களும் இந்தியர்களும் இருப்பதாகவும் மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.