மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் கடந்த செப்டெம்பர் 11 இல் மலேசிய கல்வி பெருந்திட்டம் 2013-2015 முன்னறிக்கையை வெளியிட்டார். அத்திட்டம் நாட்டின் கல்வி தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும், கல்வியின் வழி தேசிய ஒற்றுமையை வளர்க்கும் நோக்கத்தைக் கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இவ்விரு நோக்கங்களும் வரவேற்கத்தக்கது. ஆனால், அவற்றை அடைவதற்காக கூறப்பட்டுள்ள காரணங்களும், வகுக்கப்பட்டுள்ள வழிமுறைகளும் முற்றிலும் ஏற்புடையதாக இல்லை.
அவற்றை ஏற்றுக்கொண்டால், நாட்டின் தாய்மொழிப்பள்ளிகளுக்கு சமாதி கட்டும் திட்டத்தை ஏற்றுக்கொண்டதாகும்.
ஆகவே, மலேசிய கல்வி பெருந்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கும், அதற்கான மகஜர்களைப் பெறுவதற்காகவும் டோங் ஜோங் என்ற மலேசிய ஐக்கிய சீனப்பள்ளி குழுக்கள் மன்றம் ஓர் அமைதியான ஒன்றுகூடால் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
Perhimpunan Aman 1125 என்று பெயரிடப்படுள்ள அந்நிகழ்ச்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை மணி 10.30 க்கு பெட்டாலிங் ஜெயா,ஜாலான் திமோர், செக்சன் 52, பாடாங் திமோர் என்ற இடத்தில் நடைபெறும். (இந்த இடம் எம்கோர்ப் மாலுக்கு (Am Corp Mall) எதிர்புறத்தில் இருக்கிறது.
இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு அமைப்புகள், தமிழ் அறவாரியம் உட்பட, ஆதரவு தெரிவித்துள்ளன.
சம்பந்தப்பட்ட அமைப்புகள் இக்கல்வித் திட்டத்திற்கு அவற்றின் விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சு அலுவலங்களில் தாக்கல் செய்துள்ளன. இன்னும் பல அமைப்புகள் அவற்றின் அறிக்கைகளைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றன. இந்நடவடிக்கைகளுக்கு வலுவூட்டும் நோக்கத்தோடு நாளை நடைபெறவிருக்கும் டோங் ஜோங் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாய்மொழிக்கு ஒரு முழு பக்கம்கம்கூட இல்லை
இருநூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களையும், இரண்டு மில்லியன்களுக்கும் கூடுதலான சொற்களையும், கண்களைக் கவரும் வர்ணங்களும் பூசப்பட்டிருக்கும் இந்த மலேசிய கல்வி பெருந்திட்ட முன்னறிக்கையில் தாய்மொழிப்பள்ளிகளுக்கு (சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு) ஒதுக்கப்பட்டிருக்கும் இடம் ஒட்டுமொத்தமாக ஒரு பக்கம்கூட இல்லை. அந்த ஒரு பக்கத்தில் சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் பற்றி கூறப்பட்டுள்ளதை அவற்றுக்கு எதிரான கடும் குற்றச்சாடு என்றுகூட கூறலாம். அக்குற்றச்சாட்டுக்கு என்ன தண்டணை? உண்டு. ஏமாந்தவுடன் கிடைக்கும்.
தமிழ்ப்பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை!
மலாயாவுக்கு இந்தோனேசியர்களை கொண்டு வருவோம், மலாயா மலாய்க்காரர்களுக்கே, வந்தேறிகளே, விருந்தாளிகளே திரும்பிப் போங்கள் என்று முழக்கமிட்டவர்கள் மற்றும் தமிழ், சீனப்பள்ளி மாணவர்களை பல்வேறு வகைகளில் இழிவுப்படுத்தியவர்கள் இந்தக் கல்வி பெருங்திட்டம் முன்னறிக்கையில் சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்!
இத்திட்டத்தில் கூறப்படுள்ள இக்கருத்தின் சாரத்தைப் புரிந்து கொண்டவர்கள், அதன் அடிப்படையில் அவர்கள் தமிழ், சீனப்பள்ளி மாணவர்களை எங்கே கொண்டு செல்ல முனைகின்றனர் என்பதை ஊகிக்க முடிந்தவர்கள், இக்கல்வி பெருங்திட்டம் குறித்து வேறு கேள்வி எதுவும் எழுப்பாமல் அதைக் குப்பையில் தூக்கி எறியத் தயங்க மாட்டார்கள் என்று தாராளமாகக் கூறலாம்.
பெருந்திட்ட முன்னறிக்கை என்ன கூறுகிறது?
(Executive Summary E-7) “Range of schooling options are creating ethnically homogeneous environments
With many public and private schooling options at the primary and secondary levels, the Malaysian education system provides an unparalleled degree of choice for parents. Concern [stress supplied] has grown over the increasing ethnic homogenisation of schools, and the reduced opportunities for interaction with individuals from wide a range of backgrounds that homogenisation may lead to. These interactions are important as they help individuals develop a shared set of experiences and aspirations for Malaysia’s future, through which a common national identity and unity are forged.
The best available data shows that more Indian and Chinese students enrolled in National-type primary schools in 2011, in comparison to enrolment 10 years ago. The proportion of Chinese students enrolled in SJK(C)s increased from 92% in 2000 to 96% in 2011. The shift for Indian students was even more dramatic, showing an increase from 47% to 56% enrolment in SJK(T)s. As such, 90% of students in SKs are now ethnically Bumiputera. At the secondary level, the presence of a single secondary school format, Sekolah Menengah Kebangsaan (SMK), does create convergence. Nevertheless, there are still students who receive limited exposure to diversity, such as a child who transfers from a SJK(C) to an Independent Chinese school, or one who moves from an SK to a religious secondary school.”
2000 ஆம் ஆண்டில் 92% இருந்த சீனப்பள்ளி மாணவர்கள் மற்றும் 47% இருந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2011 ஆண்டில் முறையே 96 விழுக்காடாகவும், 56 விழுக்காடாகவும் உயர்ந்துள்ளது. இதில் அவர்களுக்கு அதிர்ச்சி அளிப்பது தமிழ்ப்பள்ளிகளில் சேர்ந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது! இது தேசிய ஒற்றுமைக்கு ஆபத்தானது என்பது இக்கல்வித் திட்டத்தின் கவலை.
மேற்கூறப்பட்டுள்ள கருத்து மீண்டும் (CH3-21&24) கூறப்பட்டுள்ளது:
“It is important that the nation’s diversity is reflected in our schools, so as to give Malaysian children the opportunity to live with and learn from fellow Malaysians of every ethnicity, religion, and culture. Accordingly, one data point considered as a gauge of unity at school level is enrolment trends in SKs, SJK(C)s, and SJK(T)s.
In general, there are signs of increasing ethnic stratification in schools. More Indian and Chinese students are enrolling in National-type schools today than 10 years ago (Exhibit 3-30). The proportion of Chinese students enrolled in SJK(C)s increased from 92% in 2000 to 96% in 2011. The shift for Indian students was even more dramatic, showing an increase from 47% to 56% enrolment in SJK(T)s. As such, 94% of students in SKs are now ethnically Bumiputera. This suggests
that there is a risk [stress supplied] of declining diversity and ethnic mixing across all school types, which in turn reduces the ability of schools to effective foster unity through inter-ethnic interaction.”
சீன மற்றும் இந்திய மாணவர்கள் அவர்களின் தாய்மொழிப்பள்ளிகள் பக்கம் திரும்புவது இப்போதைக்கு தேச ஒற்றுமைக்கு பாதகமானது. இன்னும் சிறிது காலம் போனால், அச்செயல் தேசத் துரோகம் என்று குற்றம் சாட்டப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தொடரலாம்
ஆகவே, தேசிய ஒற்றுமைக்கு ஆபத்தைக் கொணரும் தாய்மொழிப்பள்ளிகள் மற்றும் தாய்மொழியில் போதனைகள் போன்ற தற்போதைய செயல்முறைகள் அகற்றப்பட வேண்டும். அதுதான் “இறுதிக் குறிக்கோள்”.
அக்குறிக்கோளை நிர்ணயித்தது “ரசாக் அறிக்கை 1956”. அக்குறிக்கோளை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் இக்கல்வி பெருங்திட்டத்தின் உள்நோக்கம்.
அந்த உள்நோக்கத்தை இக்கல்வி பெருந்திட்டம் பெரிய மனதுடன் இப்படிக் கூறுகிறது:
(CH 7-16) “Current system structure to be maintained
The current structure of the Malaysian education system will remain. In particular, National-type primary schools where the medium of instruction is in Chinese language and Tamil will be maintained. Parents will have the option to decide whether to send their children to either National or National-type primary schools. After primary school, all students from different public school types will converge and enter National secondary schools. This decision is in line with the majority of views raised during the National Dialogue.”
ஆக, தாய்மொழிப்பள்ளிகள் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும். இப்பெருந்திட்டத்தைத் தயாரிப்பதற்காக மக்களுடன் நடத்தப்பட்ட கருத்துப் பரிமாற்றத்தின்போது பெரும்பான்மையோர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இம்முடிவு நிரந்தரமானதா?
இல்லை என்று அடித்துக் கூறலாம். தாய்மொழிப்பள்ளி மாணவர்களை தேசியப்பள்ளிக்கு இழுப்பதுதான் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள். அதனைச் செய்வதற்கு பெற்றோர்கள் தூண்டப்படுகின்றனர். தாய்மொழிப்பள்ளிகளை வலுக்கட்டாயமாக இழுத்து மூடுவதன் மூலம் ஏற்படக்கூடிய அரசியல் விளைவுகளைச் சமாளிப்பதற்கு இப்படி ஒரு திட்டம். ஆனால், “இறுதிக் குறிக்கோள்”:
தாய்மொழிப்பள்ளிகளுக்கு மூடு விழா!
அடித்தளம் ரசாக் அறிக்கை
இந்தக் கல்வி பெருங்திட்ட வரைவில் பங்கேற்றவர்களில் முக்கியமானவர் பேராசிரியர் சுல்கிப்லி அப்துல் ரசாக். இவர் அல்புஹரி அனைத்துலக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராவர். இவர்தான் இத்திட்ட வரைவின் மலேசிய புனராய்வுக்குழுவின் தலைவர்.
மலேசிய கல்வி திட்டம் எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்பதில் பேராசிரியர் சுல்கிப்லியின் நிலைப்பாடு மிகத் தெளிவானது. அவரைப் பொறுத்தவரையில் நாட்டில் ரசாக் அறிக்கை அடிப்படையில் ஒற்றுமையை நிலைநிறுத்துவதற்கு கல்வி மிக அவசியமானது. “கல்வியின் வாயிலாக ஒற்றுமை” என்ற கருப்பொருள் ரசாக் அறிக்கை 1956 லிருந்து தொடங்குகிறது என்பதைச் சுட்டிக் காட்டி “அனைத்து இன மாணவர்களையும் ஒற்றுமைப்படுத்தி அனைத்து இனங்களுக்குமான ஒரே கல்வி அமைவுமுறை” அமைய வேண்டும் என்ற ரசாக் அறிக்கைதான் “இன்னும் இந்நாட்டின் கல்வி அமைவுமுறையின் அடித்தளமாக இருக்கிறது” என்ற நிலைப்பாட்டை சுல்கிப்லி கொண்டிருக்கிறார் (“That is why the Razak Report which aimed to ‘unify students from all races with one education system that covers all races’, is still the cornerstone of the country’s education system.” (NST,March 18, 2012)
ரசாக் அறிக்கை 1956 இன் பரிந்துரை என்ன? மலாய்மொழியை போதனை மொழியாகக் கொண்ட கல்வி அமைவுமுறையை உருவாக்க வேண்டும்.
தாய்மொழிப்பள்ளிகள் – சீன, தமிழ்ப்பள்ளிகள் படிப்படியாக அகற்றப்பட வேண்டும். இதுதான் ரசாக் அறிக்கை 1956 இன் “இறுதிக் குறிக்கோள்”.
பிடிஎன் இனவாதம் பரப்பும் பயிற்சி
இந்த இறுதிக் குறிக்கோளுக்கு முழு ஆதரவு வழங்கியுள்ளார் கல்வி அமைச்சர் முகைதின் யாசின். அவருக்கு ஆதரவு வழங்கியுள்ளார் பிரதமர் நஜிப்.
இவர்களுக்கு தமிழ்ப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்தது தேச ஒற்றுமையைப் பாதிக்கும் கவலைக்குரிய விசயம். ஆனால், பிடிஎன் (Biro Tata Negara) என்ற ஒரு தனிப்பட்ட துறையை பிரதமர் இலகாவில் வைத்து பல்கலைக்கழக மாணவர்கள், அரசு பணியார்ளர்கள், பள்ளி ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு இனவாதம் போதிப்பது தேச ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது!
இந்த பிடிஎன் பயிற்சியின் விளைவுதான் இந்திய மற்றும் சீன மாணவர்கள் அவர்களுடைய ஆசிரியர்களால் பல்வேறு வகைகளில் இழிவுபடுத்தப்படுவதற்கு வழி வகுக்கிறது. கல்வி பெருந்திட்டம் வரைந்த மேதைகளுக்கு பிடிஎன் கக்கும் நஞ்சு தேசிய ஒற்றுமைக்கு இழைக்கும் தீங்கு தெரியவில்லை.
இந்த நஞ்சின் கொடூரத் தன்மையைப் புரிந்து ஏற்றுக்கொண்ட சிலாங்கூர் மாநில அரசாங்கம் பிடிஎன் பயிற்சிகளில் அம்மாநில அரசு பணியாளர்களும் மாநில கல்வி நிலைய மாணவர்களும் கலந்து கொள்வதற்கு தடை விதித்துள்ளது.
தேசிய ஒற்றுமைக்கு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, பள்ளி ஆசிரியர்களிடம் இனவாதத்தைப் பரப்பும் பிடிஎன் பயிற்சிகள் பற்றி எதுவும் கூறாத இந்தக் கல்வி பெருந்திட்டம் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை உயர்வது குறித்து கவலை தெரிவிப்பதின் நோக்கம் என்ன?
ஆக, எதையாவது எப்படியாவது சொல்லி அரசாங்கம் அதன் இறுதிக் குறிக்கோளை மக்கள்மீது திணிக்க வேண்டும்.
இக்குறிக்கோளைத்தான் மலேசிய கல்வி பெருந்திட்டம் 2013-2025 அமல்படுத்த விழைகிறது. ஏற்றுக்கொள்ளத் தயாரா?