மக்களவை நடவடிக்கைகளின் போது பால் உணர்வுகள் உண்மையில் புரிந்து கொள்ளப்பட்டு பின்பற்றப்படுவதை உறுதி செய்ய பெண் ஒருவர் அவையின் சபாநாயகராக நியமிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் யோசனை கூறியிருக்கிறார்.
நாடாளுமன்ற விவாதங்களின் போது செக்ஸ் ரீதியிலான கருத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை உள்ளடக்கும் வகையில் நிரந்தர ஆணை 36(4)ஐ திருத்துவதற்கு சமர்பிக்கப்பட்ட தீர்மானம் மீது பேசிய டிஏபி பூச்சோங் உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ அவ்வாறு கேட்டுக் கொண்டார்.
செக்ஸ் ரீதியிலான கருத்துக்கள் எந்த அளவுக்கு மகளிரை அவமானப்படுத்தும் என்பதை பெண் ஒருவரால் மட்டுமே உண்மையாக புரிந்து கொள்ள இயலும் என அவர் வாதாடினார்.
மக்களவையில் செக்ஸ் ரீதியிலான கருத்துக்கள் கூறப்படுவதைத் தொடர்ந்து அவற்றைத் தடை செய்வதற்கான தீர்மானம் நேற்று அவையில் கொண்டு வரப்பட்டது.