சட்டவிரோதமாகக் கூட்டம் கூடியதற்காக சுவாரம் மீது போலீஸ் விசாரணை

ஏற்கனவே சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்), மலேசிய நிறுவன ஆணையம் (சிஎம்எம்) ஆகியவற்றின் விசாரணைக்கு உட்பட்டிருக்கும்  மனித உரிமை போராட்ட அமைப்பான சுவாராம்மீது சட்டவிரோத கூட்டம் நடத்தியதாக போலீசும் விசாரணை ஒன்றை மேற்கொண்டிருக்கிறது.

சிசிஎம் செய்துள்ள புகாரின் பேரில் அவ்விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. செப்டம்பர் மாதம் சுவாராம் இயக்குனர்களை விசாரணைக்கு அழைத்திருந்தபோது அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதன் ஆதரவாளர்கள் தன் தலைமையகக் கட்டிடத்தில் ஒன்றுதிரண்டதாகவும் அப்படி அவர்கள் ஒன்றுதிரண்டது சட்டவிரோதமாகும் என்றும் சிசிஎம் அப்புகாரில் குறிப்பிட்டுள்ளது.

சுவாராம் இன்று வெளியிட்ட  ஓர் அறிக்கையில், இரு போலீஸ் அதிகாரிகள் தன் அலுவலகம் வந்து சிசிஎம் தலைமையகத்தில் கூடிய பத்துப் பேர்மீது அமைதிப் பேரணிச் சட்டத்தின்கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர் எனக் கூறியது.

TAGS: