பெந்தோங்கில் பாரிசான் நேசனல் தோல்வி கண்டால் தமது காதுகளை வெட்டிக் கொள்ளும் அர்த்தத்தில் தாம் அதனைச் சொல்லவில்லை என பாகாங் மந்திரி புசார் அட்னான் யாக்கோப் இன்று தெளிவுபடுத்தியுள்ளார்.
உண்மையில் அது மறைபொருள் சொற்றொடர் எனக் குறிப்பிட்ட அவர் தம்மைக் குறை கூறுகின்றவர்கள் முதலில் ஆங்கில மொழியைக் கற்க வேண்டும் எனச் சொன்னார்.
“உங்கள் மறைபொருள் சொற்றொடர் என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா ? ஆங்கில மொழியில் மறைபொருள் சொற்றொடர்கள் உண்டு. ஒரே அர்த்தத்தைக் கொண்ட சொற்களும் உண்டு. ஒரே வகையான சொற்களும் உண்டு..”
“ஆகவே நான் காதுகளை வெட்டிக் கொள்வேன் என்று சொன்னால் அவர்கள் (டிஏபி) அங்கு வெல்ல முடியாது என அர்த்தம். அது நம்பிக்கை அளவைக் காட்டுகின்றது. நாங்கள் (பிஎன் இழந்தால்) அவர்கள் (எதிர்க்கட்சிகள்) கத்தியை எடுத்துக் கொண்டு என் காதுகளை வெட்டுவர் என நேரடியான அர்த்தத்தை அது கொண்டிருக்கவில்லை.”
“இல்லை, இது மறைபொருள் சொற்றொடர். மக்கள் ஆங்கிலத்தைக் கற்பதற்கு அனுமதிக்கும் மறைபொருள் சொற்றொடர்,” என அவர் அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அவர் கடைசி நாளன்று நிருபர்களிடம் பேசினார்.