குறைந்தபட்ச சம்பளத்தைத் தாமதப்படுத்துவதாக அமைச்சின்மீது சாடல்

1miniதொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத் திட்டத்தை அமல்படுத்தாமல் தாமதப்படுத்துவதாக கூட்டரசு அரசாங்கம் கடுமையாகக் குறைகூறப்பட்டுள்ளது.

ஜூலையில் அரசு இதழில் வெளியிடப்பட்ட குறைந்தபட்ச சம்பள விகிதம் ஜனவரியில் அமலுக்கு வருவதாக இருந்தது. என்பதை பினாங்கு துணை முதலமைச்சர் II சுட்டிக்காட்டினார்.

மே மாதம் குறைந்தபட்ச சம்பளக் கொள்கையை அறிவித்தபோது மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தங்களுக்கு 2013-இல் எதிர்பாராத அதிர்ஷ்டம் வரப்போவதாக பூரித்து போனார்கள் என்று ராமசாமி கூறினார்.

1mini1தீவகற்ப மலேசிய தொழிலாளர்களுக்கு ரிம900-மும் சபா, சரவாக்கில் உள்ளவர்களுக்கு ரிம800-மும் குறைந்தபட்ச சம்பளம் என்று நஜிப்  அறிவித்திருந்தார்.

“ஆனால், இப்போது மனிதவள அமைச்சு அதன் அமலாக்கம் தாமதப்படும் என்று ஒரு குண்டைப் போட்டுள்ளது.

“எவ்வளவு காலத்துக்குத் தாமதப்படும் என்று தெரியவில்லை”, என்று ராமசாமி குறிப்பிட்டார். அவர் மாநில மனிதவளக் குழு தலைவருமாவார்.

“600 நிறுவனங்கள் குறைந்தபட்ச சம்பளத் திட்டத்தின் அமலாக்கத்தைத் தள்ளிப்போட இடமளித்திருப்பது பிஎன் அரசு முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதைத் தெளிவாகக் காண்பிக்கிறது”, என்றாரவர்.

என்எல்ஏசி-இன் முடிவு அமைச்சின் முடிவு அல்ல

1mini2குறிப்பிட்ட நிறுவனங்களின் நிதிக் கட்டுப்பாடுகளைக் கருத்திக்கொண்டு தேசிய தொழிலாளர் ஆலோசனை மன்றம் (என்எல்ஏசி) குறைந்தபட்ச சம்பளத் திட்டத்தின் ஒத்திவைப்பை அனுமதிக்க முடிவு செய்தது என மனிதவள அமைச்சர் டாக்டர் சுப்ரமணியத்தை (வலம்) மேற்கோள்காட்டி பெர்னாமா வெளியிட்ட செய்திமீது ராமசாமி இவ்வாறு கருத்துரைத்தார்.

குறைந்தபட்ச சம்பளத் திட்ட அமலாக்கத்தைத் தள்ளிப்போட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு 4,200 நிறுவனங்கள் முறையிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அவற்றில் 600 நிறுவனங்களுக்கு அதன் அமலாக்கத்தைத் தள்ளிவைக்க அனுமதி அளித்த என்எல்ஏசி அதன் தொடர்பில் எப்படிப்பட்ட ஆய்வு செய்தது, அதில் சம்பந்தப்பட்டவர்கள் யார்யார் என்பதையும் அமைச்சு அறிவிக்க வேண்டும் என்று ராமசாமி கேட்டுக்கொண்டார்.

“தங்களின் பொறுப்புகளைச் செய்யாத 600 நிறுவனங்களிடம்  ஏன் இப்படி தாராளமாக நடந்துகொள்கிறது?”

மனிதவள அமைச்சு,  சுயேச்சை ஆணையம் ஒன்றை அமைத்து அவ்விவகாரத்தைத் தானே ஆராய வேண்டும் என்றாரவர்.

சுப்ரமணியம் என்எல்ஏசி பின்னே ஒளிந்துகொள்ளக்கூடாது என்று குறிப்பிட்ட ராமசாமி, “இவ்விவகாரத்தில் தனித்து முடிவு எடுக்கும் அதிகாரம் என்எல்ஏசி–க்கு இல்லை”, என்றார்.

“முதலாளிகள்-ஆதரவு பிஎன்னுக்கு நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு முதுகெலும்பாகவுள்ள தொழிலாளர்களின்பால் பரிவுகாட்டும் மனம் இல்லை”, என்றும் ராமசாமி கூறினார்.