இந்தியாவிலிருந்து ஆங்கில மொழி ஆசிரியர்களைக் கொண்டு வரும் யோசனை பற்றி ஆழமாக ஆராயப்பட வேண்டும் என தேசிய ஆசிரியர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
அந்த நடவடிக்கை அரசாங்கத்துக்கு நன்மையைக் கொண்டு வருமா என்பதை நிபுணர்கள், தேசிய ஆசிரியர் சங்கம், கல்வி அமைச்சு ஆகியவை முதலில் விவாதிக்க வேண்டும் என அதன் தலைவர் ஹஷிம் அட்னான் கூறினார்.
“யாருக்கும் இழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள விரிவான ஆய்வு அவசியமாகும். இரண்டாவதாக உள்ளூர் பேராசிரியர்கள் அந்த விஷயத்தை சங்கத்துடனும் அமைச்சுடனும் விவாதிக்க வேண்டும். அடுத்தடுத்த முடிவுகள் நன்மை அளிப்பதை அது உறுதி செய்யும்.”
மாணவர்களுடைய ஆங்கில மொழி ஆற்றலை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக அவர்களுக்கு கற்றுக் கொடுக்க இந்தியாவிலிருந்து ஆங்கில் மொழி ஆசிரியர்களைக் கொண்டு வரும் யோசனையை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேற்று அறிவித்தார்.
ஏற்கனவே அமெரிக்காவின் புல்பிரைட் அற நிறுவனம், மலேசிய அமெரிக்க கல்வி பரிவரித்தனை ஆணையம் ஆகியவற்றுடன் ஆங்கில மொழி ஆசிரியர் திட்டம் அமலாக்கப்பட்டுள்ளது.
அவற்றின் கீழ் அமெரிக்காவைச் சேர்ந்த ஆங்கில மொழி ஆசிரியர்கள் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமப்புறப் பள்ளிக்கூடங்களில் பணியாற்றி வருகின்றனர்.
ஒய்வு பெற்ற ஆங்கில மொழி ஆசிரியர்களை வேலைக்குச் சேர்க்கலாம் என்று ஹஷிம் யோசனை தெரிவித்தார்.
அவர்கள் ஒரே பண்பாட்டையும் பின்னணியையும் கொண்டவர்கள் என்றும் மலேசிய மாணவர்களுக்குப் போதிக்கும் முறை அவர்களுக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.