தீவிரவாதம் காரணமாக கலவரம் சூழ்ந்துள்ள நாடுகளில் காணப்படும் ஒற்றுமை சீர்குலைவு, குழப்பம், பூசல் ஆகியவற்றிலிருந்து மலேசியர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என குடாட் எம்பி அப்துல் ரஹிம் பக்ரி கூறுகிறார்.
இந்த நாட்டில் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் நிலை நிறுத்துவதற்கு அது உதவும் என அவர் சொன்னார்.
பல இன, பல சமய நாட்டில் வாழ்ந்தாலும் மலேசியர்கள் மிதவாதத்தைக் கடைப்பிடித்து ஒற்றுமையை நிலை நிறுத்தி வருவது குறித்து அவர்கள் பெருமை கொள்ளலாம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
“மிதவாதத்தை பின்பற்றுவதில் நாம் அடைந்துள்ள வெற்றி உலக சமூகம் நம்மை மதிக்க வைத்துள்ளது.”
“நாம் பூசல்களுக்குத் தீர்வு காணவும் சமய, இன அடிப்படையில் சச்சரவுகளைத் தவிர்க்கவும் நாம் கலந்தாய்வுக்கு முதலிடம் கொடுக்கிறோம், என ரஹிம் குடாட்டில் சீன கிறிஸ்துவர்களுடைய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது கூறினார்.
ரஹிம் கூட்டரசுப் போக்குவரத்துத் துணை அமைச்சரும் ஆவார். கிறிஸ்துவர்களிடையே மிதவாதத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்துக்கு உதவுவதாக அவர் கிறிஸ்துவ சமூகத்தை அவர் பாராட்டினார்.
-பெர்னாமா