அமைச்சருடைய உதவியாளர் வீட்டின் மீது சிவப்புச் சாயம் வீசப்பட்டது

redபிரதமர் துறை துணை அமைச்சர் அகமட் மஸ்லானுடைய உதவியாளர் அப்துல் ஹலிம் துவா ரஹ்மாட் வீட்டின் மீது சிவப்புச் சாயம் வீசப்பட்டுள்ளது.

மலாக்காவுக்கு பயிற்சி வகுப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்றிருந்த அவர், செவ்வாய்க் கிழமை வீடு திரும்பிய போது தமது வீட்டில் சிவப்புச் சாயம் தெளிக்கப்பட்டதைக் கண்டார்.

“என் வீட்டின் மீது சிவப்புச் சாயம் வீசப்பட்டுள்ளதாக செவ்வாய்க் கிழமை காலை எட்டு மணிக்கு அண்டை வீட்டுக்காரர் ஒருவர் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். ஆனால் நான் அதனை மாலை நான்கு மணிக்குத் தான் பார்த்தேன்,” என அவர் இன்று காலை நிருபர்களிடம் கூறினார்.

“பின்னர் வீடு திரும்பியதும் சிவப்புச் சாயம் வீசப்பட்டிருந்ததைப் பார்த்தேன். உடனடியாக போலீசில் புகார் செய்தேன்,” என அப்துல் ஹலிம் சொன்னார்.

வாங்சா மாஜுவில் உள்ள தமது வீட்டின் முன் பகுதியிலும் பக்கச் சுவரிலும் சிவப்புச் சாயம் வீசப்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டார்.Red2

தாம் ஏற்கனவே போலீசாரிடம் சமர்பித்த இரண்டு புகார்கள் தொடர்பில் அந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக அம்னோ மலேசியா தகவல் அதிகாரியுமான அப்துல் ஹலிம் சொன்னார்.

சிவப்புச் சாயம் வீசப்பட்ட சம்பவத்துக்கு முன்பு தமது வீட்டுக்கு எதிரில் அமைந்துள்ள An-Naim சூராவ் குழு உறுப்பினர்களுடன் சர்ச்சையில் ஈடுபட்டதை அவர் விவரித்தார்.

நவம்பர் 15ம் தேதியும் டிசம்பர் 29ம் தேதியும் அந்த சூராவில் தொழுகை உரை நிகழ்த்திய சமயப் போதகர் ஒருவர் தேசிய தலைமைத்துவம் மீது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவருடன் சர்ச்சையில் ஈடுபட்டதாக அப்துல் ஹலிம் சொன்னார்.