உலகின் எந்த ஒரு இனமும் கண்டிராத துயரையும் இழப்பையும் தமிழீழ தேசமும் தமிழர்களும் கண்டிருக்கிறார்கள். தமிழீழ தேசத்தின் விடுதலையை நெஞ்சினில் சுமந்து நின்ற சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எமது உறவுகளை சொற்ப நாட்களில் கொடூரமாக கொன்று புதைத்தது சிங்கள பேரினவாத அரசு.
தாம் நேசித்த தாயை, தந்தையை, சகோதரனை, சகோதரியை, கணவனை, பிள்ளைகளை இழந்த இலட்சக்கணக்கான எமது உறவுகள் இன்றும் சொல்லென்னாத் துயரினில் இன்றும் நடைபிணமாக ஈழத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், தமிழ்த் தேசியத்தின் இன்றைய நிலை குறித்தும் தமிழீழத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை (30.12.2012) மாலை 3.30 மணிக்கு கிள்ளான் MPK கேட்போர் கூடத்தில் (Auditorium, Majlis Perbandaran Klang) கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிலாங்கூர் நடவடிக்கை குழு ஏற்பாடு செய்துள்ள இந்த கலந்துரையாடல் நிகழ்வுக்கு தமிழ்நாட்டில் இருந்து வருகை புரிந்திருந்திருக்கும் ‘மே 17’ இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்திய பிரதிநிதி போராசிரியர் சரஸ்வதி ஆகியோருடன் மேலும் சில முக்கிய தமிழின உணர்வாளர்களும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.
ஆகவே, கிள்ளான் வட்டாரத்திலுள்ள அனைத்து தமிழ் உணர்வாளர்களும் சிரமம் பாரமல் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டு அன்றை நாளில் பேசப்படும் பல தகவல்களை எமது எதிர்காலச் சந்ததியினர் அறிந்துகொள்ள வழி செய்யவேண்டும்.
தினம் தினம் நம் உறவுகளை கொன்று குவித்த சிங்கள இனவாத அரசினையும் அதற்க்கு உந்து சக்தியாய் திகழ்ந்த நாடுகளையும் அனைத்துல நீதிமன்றதில் போர்க்குற்றவாளிகளாக நிறுத்த அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழ் இனத்திற்காக அனைவரும் ஒன்று கூடுவோம்.
தொடர்புக்கு : சேகரன் – 016 2510752