டாத்தாரான் மெர்தேக்காவில் பெண்டேரா ராக்யாட் (Bendera Rakyat) கொடி பறந்தது

sang‘Sang Saka Merah Putih’ அல்லது ‘Bendera Rakyat’ என அழைக்கப்படும் கொடியை தங்களை ‘aktivis Sang Saka’ போராளிகள் எனக் கூறிக் கொண்ட ஒரு குழுவினர் நேற்றிரவு டாத்தாரான் மெர்தேக்காவில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது பறக்க விட்டனர்.

அந்தக் கொடி 1947ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி இடச்சாரிகளினால் முதன் முறையாக பறக்க விடப்பட்டது.

அதனை தேசியக் கொடியாகப் பயன்படுத்த வேண்டும் என 1940களில்  Putera-AMCJA ( அனைத்து மலாயா கூட்டு நடவடிக்கை அமைப்பு) என்ற பிரிவும் கோரிக்கை விடுத்திருந்தது.

வெள்ளை சிவப்பு நிற பலூன்கள் மூலம் நள்ளிரவு 12 மணிக்கு கூட்டரசுத் தலைநகரில் ஜாலான் ராஜா -ஜாலான் துன் பேராக் சந்திப்பில் பறக்கவிடப்பட்டது. பின்னர் அந்தக் கொடி மஸ்ஜித் ஜமெய்க் நிலையத்தின் ஸ்டார் எல்ஆர்டி தண்டவாளத்திற்கு கீழே ‘இணைக்கப்பட்டது’.sang1

அந்தக் கொடி பறக்கவிடப்பட்ட வேளையில் மக்கள் அங்கு நிகழ்ந்து கொண்டிருந்த வாண வேடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்தனர். அதனால் அவர்கள் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் முடிந்த பின்னரே அந்தக் கொடியை பார்த்தனர்.

நள்ளிரவுக்குப் பின்னர் 12.30 மணி வாக்கில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் அந்தக் கொடியை கீழே விழச் செய்வதற்கு கம்புகளைப் பயன்படுத்துவதைக் காண முடிந்தது.

அதற்கு முன்னர் மலேசியாகினியை ஒரு போராளியான முகமட் நாசிர் அபு பாக்கார் சந்தித்தார்.

sang2இடச்சாரிகள் சம்பந்தப்பட்ட சுதந்திரப் போராட்டத்தை உள்ளடக்கும் வகையில் ‘உண்மையான விவரங்களுடன்’ நாட்டின் வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும் எனக் கோரும் பொருட்டு தாங்கள் அந்தக் கொடியைப் பறக்க விட்டதாக அவர் சொன்னார்.

டாத்தாரான் மெர்தேக்காவில் மட்டுமின்றி  கிளந்தான், பாகாங், பினாங்கு ஆகியவற்றிலும் அந்தக் கொடி பறக்க விடப்பட்டதாகவும் நாசிர் தெரிவித்தார்.

“சுதந்திரத்தை பெறுவதற்கு இடச்சாரி அமைப்புக்களும் நடத்திய போராட்டங்களும் செய்த தியாகங்களும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.”sang3

“சுதந்திரத்துக்கான போராட்டத்துக்கு உந்துசக்தியாக இடச்சாரிகள் திகழ்ந்த வேளையில் இப்போது எழுதப்பட்டுள்ள வரலாற்றில் அம்னோ மட்டுமே குறிக்கப்பட்டுள்ளது. எனவே இடச்சாரிகளுடைய வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் நாங்கள் அந்தக் கொடியைப் பறக்க விட்டோம்,” என்றார் அவர்.

தாமும் தமது சகாக்களும் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் இல்லை என்றும் நாசிர் வலியுறுத்தினார்.

Sang Saka Malay  என்னும் இன்னொரு கொடி ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்  Janji Demokrasi பேரணியின் போது பறக்க விடப்பட்டது.