FGV என்ற Felda Global Ventures Holdings-ன் பங்கு விலைகள் இபிஎப் என்ற ஊழியர் சேம நிதி வாரியம் போன்ற பல அமைப்புக்களுடைய தலையீடு இல்லா விட்டால் இன்னும் குறைவாக இருக்கும் என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறிக் கொண்டுள்ளார்.
FGV பங்கு விலைகள் செயற்கையாக உயர்த்தி வைக்கப்பட்டுள்ளதை வங்கி மதிப்பீடுகள் காட்டுவதாக முன்னாள் நிதி அமைச்சருமான அன்வார் சொன்னார். ஆனால் சம்பந்தப்பட்ட வங்கிகளின் பெயரை அவர் வெளியிடவில்லை.
“நாம் வங்கிகள் போன்ற அமைப்புக்களுடைய சுயேச்சையான மதிப்பீடுகளை பார்த்தால் FGV பங்கு ஒன்றின் விலை 3 ரிங்கிட் 50 சென் -னாக மட்டுமே இருக்க முடியும்.”
“இபிஎப், ஒய்வூதிய நிதி மற்றும் இதர அமைப்புக்கள் அந்தப் பங்குகளை கொள்முதல் வடிவத்தில் தலையிட்டதால் FGV பங்கு ஒன்றின் விலை இப்போது 4 ரிங்கிட் 62 சென் -ஆக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
அன்வார் இன்று நிருபர்களிடம் பேசிய போது அந்த விவரங்களை வெளியிட்டார்.