எல்லா மலாய் பைபிள்களிலும் ‘அல்லாஹ்’ என்னும் சொல் பயன்படுத்தப்படுவதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் விடுத்துள்ள அறிக்கை குறித்து சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா அதிர்ச்சி அடைந்துள்ளதுடன் வருத்தமும் தெரிவித்துள்ளார்.
மாய்ஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றம் இன்று விடுத்த ஒர் அறிக்கையில் அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அல்லாஹ்’ என்னும் சொல் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரியது என்பதால் சிலாங்கூரில் உள்ள எல்லா முஸ்லிம் அல்லாதவர்கள் அந்த சொல்லைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என சுல்தான் ஆணையிட்டுள்ளதாக மாய்ஸ் செயலாளர் முகமட் மிஸ்ரி இட்ரிஸ் கையெழுத்திட்டுள்ள அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.