மெர்தேக்கா அரங்கத்துக்கு உள்ளும் புறமும் 100,000 பேர்

rally4மக்கள் எழுச்சிப் பேரணி தொடங்கிய போது மெர்தேக்கா அரங்கத்துக்கு உள்ளும் புறமும் 100,000 பேர் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. மழை பெய்யவில்லை. வானத்தில் ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்தது.

தேசிய கீதம் பாடப்பட்டதுடன் பேரணி தொடங்கியது. அரங்கதிற்கு வெளியில் காத்திருக்கும் மக்கள் செவி மடுப்பதற்கு உதவியாக ஒலிபெருக்கி சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

முதலில் டிஏபி ராசா எம்பி அந்தோனி லோக் பேசினார். சீன மொழியிலும் மலாய் மொழியிலும் பேசிய அவர், பிஎன் அரசாங்கத்தைத் தேர்தலில் தோற்கடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

“நஜிப் செமினி தெஸ்கோவில் கூட்டம் நடத்துகிறார். நாம் மெர்தேக்கா அரங்கத்தில் இருக்கிறோம். பிஎன் -னை எதிர்க்க நாம் எழுந்துள்ளோம்.”

பார்ட்டி இக்காத்தான் தலைவரும் முன்னாள் அம்னோ அமைச்சருமான காதிர் ஷேக் பாட்சிரும் பெர்சே இணைத் தலைவர்  அம்பிகா ஸ்ரீனிவாசனும் அரங்கத்தில் காணப்பட்டனர்.

இன்று பிற்பகுதியில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் உரையாற்றுவதற்கு ஏற்பாடுH.Rakyat-2013.1 செய்யப்பட்டுள்ளது. இன்றைய பேரணி பற்றிய தகவல்களை பரப்புவதின் மூலம் நாட்டில் உள்ள தங்கள் சக குடிமக்களுக்கு ஆதரவு வழங்குமாறு வெளிநாடுகளில் வாழும் மலேசியர்களையும் ஆதரவாளர்களையும் ஒர் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

“இன்று நாள் முழுவதும் டிவிட்டரில் செய்திகளை அனுப்புங்கள், செய்திகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள், ஒவ்வொரு குரலும் முக்கியமானது. காரணம் அவை நம்பிக்கையை வலுப்படுத்துகின்றன. இன்றைய ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ள தடைகளை அவை தகர்த்து விடும்.”

ஜோகூர் பாஸ் பேராளர் சுஹாய்சான் கையிட் ஜோகூரில் புலாவ் பத்து பூத்தே பற்றியும் இஸ்காண்டார் திட்டம் பற்றியும் பேசினார்.

அதனைத் தொடர்ந்து தீவகற்ப மலேசிய ஒராங் அஸ்லி மக்களைப் பிரதிநிதித்த திஜா பேசினார். பூர்வகுடி மக்களுடைய உரிமைகள் பற்றிப் பேசிய அவர் ஒராங் அஸ்லி நிலம் திருடப்பட்டுள்ளதாகச் சொன்னார்.

இதனிடையே பொது மக்களுக்கு அல்லது பங்கேற்பாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திய சூழ்நிலைகளோ விரும்பத்தகாத சம்பவங்களோ ஏதுமில்லை என்று டாங் வாங்கி ஒசிபிடி ஜைனுடின் அகமட் இன்று நிருபர்களிடம் கூறினார்.

நிருபர்களை அவர் சந்தித்தது யூ டியூப் இணையத் தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

H.Rakyat-2013.2ஜாலான் ராஜா, டத்தோ ஒன் சுற்று வட்டம், டாத்தாரான் மெர்தேக்கா, ஜாலான் அம்பாங், ஜாலான் துன் ரசாக், ஜாலான் புடு, ஜாலான் சுல்தான், ஜாலான் ஹாங் துவா ஆகிய சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன.

அரங்கத்திற்கு உள்ளே 20,000 முதல் 25,000 பேரும் வெளியே 20,000 பேரும் இருப்பதாக அவர் மதிப்பிட்டார்.

இதனிடையே அரங்கத்திற்கு சென்ற ஊர்வலங்கள் அனைத்தும் அமைதியாக இருந்தன. போக்குவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் உதவினர்.