பேரணி பற்றிய செய்தியைப் பரப்புங்கள் என அன்வார் வேண்டுகோள்

stadiumமக்கள் எழுச்சிப் பேரணிக்காக ஆயிரக்கணக்கான மக்கள் மெர்தேக்கா அரங்கத்தில் கூடிய வேளையில் அந்த நிகழ்வு பற்றிய தகவலைப் பரப்புமாறு வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வேண்டுகோள் விடுக்கும் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

“வரும் தேர்தலில் வாக்களிக்கும் வெளிநாட்டு மலேசியர் என்ற முறையில் மலேசியாவில் நிகழ்கின்ற விஷயங்கள் மீது உங்கள் கருத்துக்களை சுதந்திரமான தனி நபர் என்ற முறையில் சொல்லுங்கள். அதனால் நமது சவால்கள் பற்றி மேலும் பலர் அறிய முடியும். அவர்கள் குறைந்த வளங்களுடன் செயல்படும் எங்களுக்கு ஆதரவு வழங்க அது வகை செய்யும். மாற்றம் சாத்தியம் என்ற நம்பிக்கையும் அது நெருங்கி வருகின்றது என்ற நம்பிக்கையும் மலேசியாவில் உள்ள உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்படும்.”stadium1

“இன்று நாள் முழுவதும் டிவிட்டரில் செய்திகளை அனுப்புங்கள், செய்திகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்,  ஒவ்வொரு குரலும் முக்கியமானது. காரணம் அவை நம்பிக்கையை வலுப்படுத்துகின்றன. இன்றைய ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ள தடைகள் தகர்ந்து நமது வாழ்வில் மீண்டும் வசந்தம் பிறக்கும்,” என அவரது அறிக்கை குறிப்பிட்டது.

அரங்கத்துக்கும் உள்ளும் புறமும் 100,000க்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்த பேரணியிலும் அன்வார் பிற்பகல் 3 மணிக்குப் பேசினார்.

“மலேசியாவும் அதன் மக்களும் முக்கியமானவர்கள் என்பதை மற்றவர்களுக்குக் காட்டுவதற்கு ஒன்று கூடி மக்கள் எழுச்சி பேரணிக்கு (Himpunan Kebangkitan Rakyat) கலந்து கொள்ள வந்துள்ள அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்.”

மக்கள் எழுச்சி பேரணி பல பிரச்னைகளை எடுத்துக் காட்டியுள்ளன. ஆனால் அவை ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. பலருடைய குரல்கள் ஒன்றாக ஒலிக்கும் போது மலேசியா சிறந்த நாடாகத் திகழும்.

மலேசியர்கள் ஒன்றுபட்டு நிற்பதை பேரணி உணர்த்தியுள்ளது

தலைநகரத்திலும் நாட்டின் மற்ற இடங்களிலும் வெளிநாடுகளிலும் இன்று நிகழ்ந்துள்ள அமைதியான பேரணிகள் பெரும்பாலான மலேசியர்கள் ஒன்றுபட்டு ஒரே குரலாக மாற்றம் வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர் என்றும் அன்வார் சொன்னார்.

“தேர்தல் நடைமுறைகளை சீர்திருத்துவதா? சுதந்திரமாக தேர்தலுக்கு வகை செய்வதா? லைனாஸை நிறுத்துவதா? அல்லது பெல்டா குடும்பங்களை பாதுகாப்பத?”

“நாம் சுதந்திரமான நியாயமான தேர்தல்களை விரும்புகிறோம். உங்களுக்கு ஒரு வாக்கு உள்ளது. எனக்கும் ஒரு வாக்கு உள்ளது. நமது வாக்குகளை யாரும் திருடக் கூடாது. நமது வாக்குகளைப் பாதுகாக்க நாம் போராடுவோம். நமது வாக்குகளை யாரும் கேலிக்கூத்தாக்குவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தேர்தலை சீர்திருத்தங்கள் என கேஎல்112 இப்போது சொல்கிறது.”

“நமது பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்குவதும் அனைத்து மலேசியப் பிள்ளைகளுக்கும் இலவசக் கல்விக்கு உத்தரவாதம் அளிப்பதும் கடமையாகும். இளைஞர்கள் மீது கடன்களைத் திணிக்கக் கூடாது.  இலவசக் கல்வி ஒர் உரிமை என கேஎல்112 தெரிவிக்கிறது.”

stadium2“சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மேலாக வர்த்தகம் கருதப்படக் கூடாது. அதனால்தான் குவாந்தான் மக்களுடைய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இப்போது முயலுகிறோம். லைனாஸுக்கு ‘இல்லை’ என  கேஎல்112 சொல்கிறது,” என்றார்  அந்த பிகேஆர் மூத்த தலைவர்.

“நிலக் குடியேற்றக்காரர்களும் அவர்களது குடும்பங்களும் வர்த்தகம் செய்யப்படுவதற்கான பொருட்கள் அல்ல. வலுக்கட்டாயமாக பங்குச் சந்தைப் பட்டியலில் பெல்டா சேர்க்கப்பட்ட போது நாம் அதனைப் பார்த்தோம். அவ்வாறு சேர்க்கப்பட்டதால் மக்கள் இன்று எதிர்நோக்கும் நிதிச் சிரமங்களையும் நாம் காண்கிறோம்.’

“நிலக் குடியேற்றக்காரர்களுக்கு எது நன்மையோ அதனை கேஎல்112 முடிவு செய்கின்றது. பலவீனமானவர்களை உறிஞ்சும் சிறிய கும்பலுக்கு ஆதாயகரமானதை அல்ல.”

பேரணி உணர்த்தியுள்ள செய்தி மிகவும் தெளிவானது எனக் கூறிய அன்வார், மக்களுடைய குரலை  அரசாங்கம் இனிமேலும் அலட்சியம் செய்ய முடியாது என்றார்.