வாசகர்கள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Pongal-celebrationsதைப்பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடும் வாசகர்கள் அனைவருக்கும் செம்பருத்தி இணையத்தளத்தின் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ‘இல்லங்கள்தோறும் பொங்கட்டும் பொங்கல்! இதயங்கள்தோறும் தங்கட்டும் இன்பங்கள்!’

மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதமாக கரும்பு, மஞ்சள், வாழை ஆகிய விளைபொருள்களை வைத்து புதுப்பானையில் அரிசியிட்டு பொங்கலோ பொங்கல் என்று இறைவனை வணங்கி கொண்டாடும் பண்டிகை பொங்கல் ஆகும். வள்ளுவர் குறளுக்கு ஏற்ப உலகில் மக்கள் பல தொழில்கள் செய்து வந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் போற்றப்படுகிறது.

‘தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு’

மலர்ந்தொளிரும் தை திங்கள் முதல் நாள், தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது.

1921 ஆம் ஆண்டு தமிழக்கடல் தவத்திரு மறைமலையடிகள் தலைமையில் 500 தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்ட வராலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கூட்டம் நடத்தப்பெற்றது. சைவம், வைணவம், புத்தம், சமணம், இந்து, கித்துவம், முகமதியம் என எல்லா சமயங்களையும் சார்ந்த தமிழப் பேரறிஞர்கள் ஒன்றுகூடி ஆய்முறைகளின் அடிப்படையில் முப்பெரும் உண்மைகளை உலகத்திற்கு
அறிவித்தனர்.

தமிழுக்கு அரணாக விளங்கிய 500 தமிழறிஞர்கள் சமய வேறுபாடுகளையும் பொள்கை மாறுபாடுகளையும் மற்நது தமிழ் ஒன்றையே முன்படுத்தி முறையான ஆய்வியல் பார்வையோடு தமிழப் புத்தாண்டு அறிவிப்பை வெளியிட்டனர். அன்று தொடங்கி உலகம் முழுவதுமுள்ள தமிழப் பற்றாளர்கள் தை முதல் நாளையே தமிழப் புத்தாண்டாக ஏற்றிப் போற்றி கொண்டாடி மகிழ்கின்றனர். தமிழாண்டு முறைப்படி தங்கள் வாழ்வியலை அமைத்துக்கொண்டு தமிழியல் நெறிப்படி வாழந்தும் வருகின்றனர்.

இதற்கெல்லாம் முன்பாக…

தைப் பொங்கல் விழா நாளைத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கமாக தமிழர்கள் பலகாலமாகத் கொண்டாடி வந்துள்ளனர். இதற்கான
அகநிலைச் சான்றுகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன.

தமிழ் தமிழாக தமிழர் தமிழராக பொங்கல் திருநாளைச் சமயம் கடந்த பண்பாட்டு விழாவாகவும், உலகத் தமிழருக்கு உரிய தமிழ்ப் புத்தாண்டாகவும் கொண்டாடுகின்ற காலம் மலரவேண்டும். அவ்வாறு மலரும் நாளே தமிழின விடுதலை நாளாக இருக்கும். தமிழரின் விடிவுக்குரிய தொடக்கமாக அமையும்.

உலகின் பழமையான இனமாகிய தமிழினம் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால், தமிழரின் வாழ்வியல் தமிழியலைச் சார்ந்திருக்க வேண்டும்.தமிழியத்தின் விழுமியங்களைத் தாங்கியிருக்க வேண்டும். தமிழிய மரபுவேர்களில் எழுந்து நிற்க வேண்டும்.இந்த முடிவொன்றே தமிழருக்கு விடிவாக அமையும். – தகவல் : கம்பார் தமிழர் விழிப்புணர் இயக்கம்

TAGS: