தீவிர வலச்சாரி மலாய் உரிமைகள் போராட்ட அமைப்பான பெர்க்காசா பைபிள்களுக்கு எரியூட்டப் போவதாக தெரிவித்துள்ளதை உடனடியாகக் கண்டிக்காததற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் சாடியிருக்கிறார்.
“இனவெறியைத் தூண்டி விடும் பொறுப்பை அம்னோ பெர்க்காசாவிடம் ஒப்படைத்துள்ளது எங்களுக்குத் தெரியும். அம்னோ தலைமைத்துவத்திடமிருந்து இது வரை எந்தக் கடுமையான கண்டனத்தையும் நாங்கள் செவிமடுக்கவில்லை.”
“பிரதமர் அல்லது உள்துறை அமைச்சரும் கூட ஒன்றும் சொல்லவில்லை. அது மிகவும் கவலை அளிக்கிறது.”
“கட்சி அரசியல் ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்கள் எங்காவது ஒர் எல்லையை வரைய வேண்டும்,” என அன்வார் பிகேஆர் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.