துணை அமைச்சர்: அரசாங்க முறைக்கு சவால் விடுக்க வேண்டாம்

bakriஅரசாங்க முறையின் நம்பகத்தன்மை மீதும் சட்ட ஆட்சி மீதும் சவால் விடுக்க முயலும் சில தரப்புக்கள் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களை போக்குவரத்துத் துணை அமைச்சர் அப்துல் ரஹிம் பக்ரி கேட்டுக் கொண்டுள்ளார்.

நடப்பு அரசாங்கம், சட்டமியற்றும் துறை, நீதித் துறை, தேர்தல் முறைகள் ஆகியவை மீதான மக்கள் நம்பிக்கையை சீர்குலைக்க அந்தத் தரப்புக்கள் முயலுவதாக அவர் சொன்னார்.

“தவறான எண்ணங்களை ஏற்படுத்துவதின் மூலம் அரசாங்க முடிவுகளை கண்டிக்க அவை முற்பட்டுள்ளன”

“அந்தத் தரப்புக்கள் மாற்று ஊடகங்களைக் கூடின பட்சம் பயன்படுத்திக் கொள்கின்றன. அதனால் அவை மீது நடவடிக்கை எடுப்பது சிரமமாகியுள்ளது,” என்றார் அப்துல் ரஹிம்.

“அவர்களில் பெரும்பாலோர் அந்நிய நாடுகளிலிருந்து இணையம் வழி தாக்குதல் தொடுக்கின்றனர். அதனால் அவர்கள் அரசாங்கத்தை சுதந்திரமாகத் தாக்க முடிகிறது.”

“அந்த வழியைப் பின்பற்றி அரபு எழுச்சி எனத் தாங்கள் அழைக்கும் மத்திய கிழக்கில் நிகழ்ந்ததைப் போன்று அரசாங்கத்தை எதிர்ப்ப்பதற்கு மக்களைத் தூண்ட முயலுகின்றனர்.’

குடாட் எம்பி-யுமான அவர் தமது தொகுதியில் உள்ள கம்போங்  ஸ்ரீ அமானில் அப்துல் ரஹிம் மக்களிடையே பேசினார்.

அந்தத் தரப்புக்களின் திட்டத்தை மக்கள் அறியாவிட்டால் அவை வைத்துள்ள வலையில் மக்கள் விழுந்து விடக் கூடும்.”

“ஆகவே ஒற்றுமையாக இருப்பதின் மூலம் அந்த வலையில் சிக்காமல் தவிர்க்க முடியும்,” என்றும் அவர் சொன்னார்.

முன்னதாக அவர் 250 ஏழைக் குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கியதுடன் கிராம மக்களுக்கு நன்மை தரும் பல சிறிய மேம்பாட்டுத் திட்டங்களையும் அறிவித்தார்.

பெர்னாமா