அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விரும்பும் பல பிஎன் முக்கியப் பிரமுகர்கள் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆய்வில் தோல்வி கண்டுள்ளனர்.
அந்தப் பிரமுகர்களில் இரண்டு கூட்டரசு அமைச்சர்கள், ஒரு மந்திரி புசார், ஒரு முதலமைச்சர், இரண்டு உயர் நிலை கட்சித் தலைவர்கள் ஆகியோரும் அடங்குவர் என மலாய் மொழி நாளேடான சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தத் தனிநபர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதை அந்த ஏடு வெளியிடவில்லை என்றாலும் பிஎன் கட்சிகள் மட்டுமே எம்ஏசிசி-யிடம் சாத்தியமான தங்கள் வேட்பாளர்கள் பெயர்களை சமர்பித்துள்ளதாகத் தெரிகிறது.
பக்காத்தான் ராக்யாட் அவ்வாறு செய்வதற்கு மறுத்து விட்டது. காரணம் எம்ஏசிசி மீது தனக்கு நம்பிக்கை இல்லை என அது கூறி விட்டது.
எம்ஏசிசி மேற்கொண்ட தொடக்க நிலை ஆய்வுகளுக்குப் பின்னர் அது கண்டு பிடிக்கப்பட்டது. அந்தத் தனிநபர்கள் அடுத்த பொதுத் தேர்தலில் நிறுத்தப்பட மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த ஏடு தெரிவித்தது.