தண்ணீர் பிரச்னை மீது பிகேஆர் சிலாங்கூர் சுல்தானிடம் மகஜர் சமர்பித்தது

pkrசிலாங்கூரில் தொடர்ந்து நீடிக்கும் தண்ணீர் விவகாரம் மீது சிலாங்கூர் சுல்தான்  தலையிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் மகஜர் ஒன்றை சமர்பிப்பதற்காக ஷா அலாமில் உள்ள சுல்தான் சலாஹுடின் அப்துல் அஜிஸ் ஷா பள்ளிவாசல் முன்பு 30 பேர் கூடினர்.

சிலாங்கூர் பிகேஆர் இளைஞர் பிரிவு ஏற்பாடு செய்திருந்த அந்த நிகழ்வில் நீர் வளச் சலுகை வழங்கப்பட்டுள்ள சபாஷ் நிறுவனத்திடமிருந்து நடவடிக்கைகளை மாநில அரசாங்கம் ஏற்றுக் கொள்வதற்கு உதவி செய்ய தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை சுல்தான் பயன்படுத்த வேண்டும் அந்த மகஜரில்  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பிற்பகல் மணி 2.30க்கு தொடங்கிய அந்த நிகழ்வில் ஸ்ரீ மூட சட்டமன்ற உறுப்பினர் சுஹாய்மி ஷாபியும், சிலாங்கூர் பிகேஆர் இளைஞர் தலைவர் அஸ்மிஸாம் ஸாமான்ஹுரியும் கலந்து கொண்டார்கள்.

15 நிமிடங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அந்தக் குழுவினர் சுல்தானிடம் மகஜரைச் சமர்பிப்பதற்காக தங்கள் கார்களில் இஸ்தானா காயாங்கானுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.

டிசம்பர் மாதம் தொடக்கம் சிலாங்கூரில் சில பகுதிகள் நீர் விநியோகப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றன. அதற்கு வாங்சா மாஜு, புடு உலு ஆகியவற்றில் உள்ள இறை குழாய்கள் வேலை செய்யத் தவறி விட்டதே காரணம் எனக் கூறப்பட்டது.

2015ம் ஆண்டு செயல்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அங்கீகரிக்க சிலாங்கூர் மறுப்பதே பிரச்னைக்குக் காரணம் என ஆளும் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.