உங்கள் கருத்து : சட்ட விரோத அரசாங்கம் நம்மை ஆட்சி செய்கிறதா ?

najib“12வது பொதுத் தேர்தலும் அதற்கு முந்திய தேர்தல்களும் பெரிய மோசடிகள் மூலம் வெற்றி பெற்றுள்ளது  தெளிவாகியுள்ளது. நாட்டுப் பற்றுள்ள சாதாரண மலேசியர்களாகிய நாம் 13வது பொதுத் தேர்தலில் அதே அரக்கர்களை வெற்றி பெற அனுமதிக்க வேண்டுமா?”

சபா ஆர்சிஐ பற்றி தெரிய வேண்டிய எட்டு விஷயங்கள்

ஸ்டார்: சபா மக்கள் தொகை விகிதாச்சாரத்தை முற்றாக மாற்றுவது, அப்போதைய் பிபிஎஸ் என்ற Parti Bersatu Sabah அரசாங்கத்தை வீழ்த்துவது, மோசடி மூலம் முஸ்லிம் ஆதிக்கம் பெற்ற அம்னோ/பிஎன் அரசாங்கத்தை அமைப்பது ஆகியவை அந்த அடையாளக் கார்டு மோசடியின் முழுமையான நோக்கமாகும்.

ஆகவே பிபிஎஸ், உப்கோ என்ற United Pasokmomogun Kadazandusun Murut Organisation பிபிஆர்எஸ் என்ற மூன்று உள்ளூர் கட்சிகளும் அத்தகைய அரசியல் மோசடியைத் தெரிந்து கொண்டு எப்படி அம்னோ/பிஎன் -உடன் நட்புறவாக இருந்தன ?

அவை அம்னோ/பிஎன் அரசாங்கத்தில் தொடர்ந்து இருந்தது அவற்றின் அதிகாரம், பதவி, பணம் ஆகியவற்றின் மீது உள்ள ஆசையையே அது காட்டுகின்றது. பிஎன் கூட்டணியில் தொடர்ந்து இருக்க வேண்டுமா என்பதை அவை தங்கள் மனச்சாட்சியைக் கேட்க வேண்டும்.

பிஎன் மட்டுமே மாநிலத்துக்கும் அதன் மக்களுக்கும் உதவ முடியும் என எண்ணுவது தவறாகும். மாநிலத்தின் கௌரவமும் சுய மரியாதையும் அடகு வைக்கப்பட்டுள்ளது.

அவை உண்மையில் மோசடிக்காரர்களுடன் ‘உறவு’ வைத்துள்ளன. திருடர்களும் கொள்ளையர்களும் நிறைந்த கூடாரத்தில் அவற்றுக்கு என்ன வேலை ?

2 Tim 1:7: அம்னோ ஜமீன்தார்கள் சபா கள்ளக் குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்தின் (ஆர்சிஐ) கண்டு பிடிப்புக்கள் மீது எல்லா வகையான வெற்று யோசனைகளையும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த எம் திட்டம் மாற்றிய சபாவின் மக்கள் தொகை விகிதாச்சாரத்தை ஆர்சிஐ மாற்றாது என அவர்கள் நம்புகின்றனர்.

12வது பொதுத் தேர்தலும் அதற்கு முந்திய தேர்தல்களும் பெரிய மோசடிகள் மூலம் வெற்றி பெற்றுள்ளது  தெளிவாகியுள்ளது. நாட்டுப் பற்றுள்ள சாதாரண மலேசியர்களாகிய நாம் 13வது பொதுத் தேர்தலில் அதே அரக்கர்களை வெற்றி பெற அனுமதிக்க வேண்டுமா ?

நியாயமானவன்: உஸ்னோ என்ற United Sabah National Organisation-னின் முஸ்தாபா ஹருண் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுக்கு உடந்தையாக இருந்த முக்கியமான மனிதர். அவர் ஜோசப் பைரின் கிட்டிங்கானிடமிருந்து முதலமைச்சர் பதவியைப் பிடுங்கியவர்.

முஸ்தாபா தமது சொந்த வம்சாவளி ஆட்சியை நிறுவ விரும்பினார். தமது புதல்வர்களில் ஒருவர் எதிர்காலத்தில் முதலமைச்சராக வேண்டுமென அவர் விரும்பினார். ஆனால் அவரது திட்டங்கள் தோற்று விட்டன. அவரது புதல்வர் நீண்ட நாள் வாழவில்லை. முஸ்தாபாவும் பின்னர் காலமாகி விட்டார்.

ஒடின்:  கடாஸாண்டுசுன் தலைவர் என்ற ‘huguan siou’ பட்டம் அவரை அந்த இன மக்கள் போற்ற வகை செய்தது.

பிஎன் தொடர்ந்து ஆட்சியில் இருக்க மற்ற நாட்டு முஸ்லிம்களைக்  கொண்டு வந்து தமது இன மக்களை  சிறுபான்மையாக்கும் மோசடித் திட்டம் பற்றி அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

அவர் அதனைத் தடுப்பதற்கு ஒன்றும் செய்யாததுடன் மோசடிக்காரர்களுடன் ஒத்துழைத்தார். அதனால் அவரும்  அந்த மோசடிக்கு வித்திட்ட மகாதீரைப் போன்றவரே.

கடல் நாகம்: பைரின், உங்கள் இன மக்களுக்கும் சபா மக்களுக்கும் நீங்கள் சரியானதைச் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது.

பிஎன் -னிலிருந்து விலகி பக்காத்தான் ராக்யாட்டில் சேருங்கள். இப்போது வலுவான எதிர்த்தரப்பாகத் திகழும்  அது சட்டப்பூர்வ அரசாங்கமாக அது வெற்றி பெற அது வழி வகுக்கும். நீங்கள் விட்டுச் செல்லும் பாரம்பரியமாக அது இருக்கும்.

சக மலேசியன்: இது வரை தெரிவிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி அளிக்கும் தகவல்களைப் பார்க்கும் போது ஆர்சிஐ  தனது பணிகளைத் துரிதப்படுத்தி  13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அறிக்கை சமர்பிக்க  பிரதமர் நஜிப் ரசாக் அனுமதிப்பார் என நான் எண்ணவில்லை.

தேர்தலுக்கு முன்னதாக சபா ஆர்சிஐ தனது பணிகளைத் தொடங்க அவர் ஏன் அனுமதித்தார் ?  எல்லாத் தவறுகளிலிருந்தும் பிஎன் -னை ஆர்சிஐ விடுவிக்கும் என அவர் நம்புகிறாரா ? அதனை அடுத்து தாம் மீண்டும் பிரதமராக நியமனம் பெற முடியும் எனக் கருதுகிறாரா ?

ஆர்சி முடிவுகள் பிஎன் -னுக்குப் பாதகமாக இருக்கும் என அவர் எண்ணியிருந்தால் அவர் சபா ஆர்சிஐ-யை  எளிதாக நிராகரித்திருக்க முடியும்.

1980 களிலும் 1990 களிலும் வெளி வந்த Sylvester Stallone திரைப்படங்களில் வரும் ராம்போவைப் போன்று ‘செய்து முடி அல்லது செத்து மடி’ என்ற துணிச்சலுடன் நஜிப் இயங்குவதாகத் தெரிகிறது.

அவர் காயமின்றி வெளியில் வருவாரா அல்லது வாக்காளர்கள் அவரை மூழ்கடித்து விடுவார்களா என்பதே வேறுபாடு ஆகும்.

பில் சின்: 1970க்கும் 2000க்கும் இடையில் சபா மக்கள் தொகை 285 விழுக்காடு கூடியுள்ளது. அதேவேளையில் சரவாக், தீவகற்ப மக்கள் தொகை முறையே 106 விழுக்காடும் 113 விழுக்காடும் கூடியுள்ளன.

உண்மையில் சபா மக்கள் தொகை 110 விழுக்காடு மட்டுமே பெருகியிருக்க வேண்டும். ஆனால் அது இரு மடங்கு கூடியுள்ளது. அந்த எண்ணிக்கை சபா மக்கள் எண்ணிக்கையில் 50 விழுக்காடு ஆகும். அவர்கள் அண்டை நாடுகளான பிலிப்பீன்ஸையும் இந்தோனிசியாவையும் சேர்ந்தவர்கள்.

சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களுக்கு கொடுக்கப்பட்ட போலி அடையாளக் கார்டுகள் அந்த எண்ணிக்கையில் அடங்கவில்லை. சபா இன்று அதன் சுதேசி மக்களுக்கு சொந்தமானது அல்ல. எதிர்காலத்தில் அது மலேசியாவுக்கு சொந்தமில்லாமலும் போகலாம்.

அடையாளம் இல்லாதவன்_3da0: ஜனவரி 18 முடிந்த ஐந்து நாள் விசாரணையில் மொத்தம் 29 பேர் சாட்சியமளித்துள்ளனர். மொத்தம் 48 பேர் அழைக்கப்படுவர் என ஆர்சிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் மொத்தம் 167 சாட்சிகள் அழைக்கப்படுவர் என எப்படி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சொன்னார்?

ஆர்சிஐ-காட்டிலும் நஜிப்புக்கு எப்படி அந்த விவரங்கள் தெரிந்தன ?

எரினெஸ்: இதனை படித்த பின்னர் நான் அதிர்ச்சியில் உறைந்து விட்டேன். இந்த நாட்டை நேசிக்கும் எல்லாமலேசியர்களும் அவ்வாறு தான் எண்ணுகின்றனர். இந்த நிலை மீண்டும் ஏற்படாமல் அவர்கள்  வாக்களிக்க  வேண்டும்.

துரோகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் தேசத் தூரோகத்திற்காகத் தண்டிக்கப்பட வேண்டும்.

 

TAGS: