ஹிஷாம்: கோரப்படாத மைகார்டுகளை சாபாவுக்கு அனுப்புமாறு பணிக்கும் கடிதம் போலியானது

1letterஉள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன், கோரப்படாமல் கிடக்கும் மைகார்டுகளை சாபாவுக்கு அனுப்பும்படி பணிக்கும் கடிதம் எதுவும் கிடையாது என்று மறுத்தார். அவ்வாறு கூறும் கடிதம் இருந்தால் அது போலிக் கடிதமாகத்தான் இருக்கும்.

“அது ஒரு போலி கடிதம். அது பொய்யானது. ஒரு போலிக் கடிதத்தின் அடிப்படையில்தான் அவ்வாறு குற்றம் சொல்லப்பட்டுள்ளது.

1hisham 1“சில தரப்பினர் கூறும் இக்குற்றச்சாட்டுகளை நம்ப வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறேன்”.அமைச்சர் இன்று காலை, புத்ரா ஜெயாவில், குடிநுழைவுத் துறை தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசினார்.

இவ்விவகாரம் தொடர்பில் தேசிய பதிவுத் துறை (என்ஆர்டி) தலைவர் ஜரியா முகம்மட் சைட் போலீஸ் புகார் ஒன்றைச் செய்வார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று, அப்படி ஒரு கடிதம் இருப்பதாக தெரிவித்த பாஸ் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார், அரசாங்கம் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரினார்.

18 மாதங்கள் ஆகியும் பெறப்படாமல் கிடக்கும் மைகார்டுகளை சாபா, கெனிங்காவுக்கு அனுப்ப வேண்டும் என்று பணிக்கும் கடிதம் ஒன்று 2012, டிசம்பர் 12 என்று தேதியிடப்பட்டு எல்லா மாநில என்ஆர்டி இயக்குனர்களுக்கும் அனுப்பப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.