‘விஸ்வரூபம்’ திரைப்பட விநியோகிப்பாளரை உள்துறை அமைச்சு சந்திக்கும்

viswa‘விஸ்வரூபம்’ திரைப்படத்தை இந்த நாட்டில் திரையிடப்படுவது  பற்றி விவாதிப்பதற்காக அதன் விநியோகிப்பாளருடன் உள்துறை அமைச்சு கூட்டம் ஒன்றை நடத்தவிருக்கிறது.

சர்ச்சைக்குரிய அந்தப் படத்தின் மீது எழுந்துள்ள பிரச்னையை ஆய்வு செய்யும் பொருட்டு அடுத்த வாரம் Lotus Five Star Sdn Bhd என்ற அந்த விநியோகிப்பாளருடன் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் தெரிவித்தார்.

“எனக்கு அந்தத் திரைப்பட விநியோக உரிமையாளரைத் தெரியும். நாங்கள் பிரச்னைக்குத் தீர்வு காண முயலுகிறோம், என அவர் சொன்னார்.viswa1

ஹிஷாமுடின் இன்று குளுவாங்கிற்கு அருகில் உள்ள பெல்டா உலு பெலித்தோங்கில் செம்புரோங் நாடாளுமன்றத் தொகுதிக்கான நபிகள் நாயகம் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

அந்தத் திரைப்படம் மீதான உண்மையான பிரச்னையை புரிந்து கொள்ளுமாறு அவர் எல்லாத் தரப்புக்களுக்கும் குறிப்பாக பிஎன் உறுப்புக் கட்சிகளுக்கும் மக்களுக்கும் அமைச்சர் நினைவுபடுத்தினார்.

அவர்கள் வாக்குவாதத்தை தவிர்ப்பதற்கு வெளிநபர்களுடைய அறிக்கைகளை நம்பக் கூடாது என்றார் அவர்.

‘விஸ்வரூபம்’ திரைப்படம் ஜனவரி 24ம் தேதி இந்த நாட்டில் முதலில் திரையிடப்பட்டது. ஆனால் உள்துறை அமைச்சின் உத்தரவைத் தொடர்ந்து அது அடுத்த நாள் திரையிடப்படுவதிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்டது.

கமலஹாசன் நடித்துள்ள அந்தத் திரைப்படம் முஸ்லிம் சமூகத்தை அவமானப்படுத்துவதாக கூறப்பட்ட பின்னர் சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளது.

பெர்னாமா