உங்கள் கருத்து: “அன்வார் அதில் பங்கேற்காமல் இருக்கலாம். அப்படிச் சொல்வதால், என்ன நடந்தது என்பது அவருக்குத் தெரிந்திருக்காது என்பது பொருளாகாது. துணைப் பிரதமராக இருந்த அவருக்கு நடந்தது தெரியாது என்பதை நம்ப முடியவில்லை”.
அன்வார்: புரஜெக்ட் ஐசி-க்கும் எனக்கும் தொடர்பில்லை
சேரிவாசி: தேர்தல் ஆணையமும் அம்னோவும் எந்த அளவுக்கு தேர்தல் மோசடி வேலைகளைச் செய்துள்ளன என்பதைப் பற்றிப் பேசுவதையும் அலசி ஆராய்வதையும் நிறுத்துவது நல்லது என்று நினைக்கிறேன்.
மாற்றரசுக் கட்சிகளும், என்ஜிஓ-களும் பெர்சேயும் ஒன்று சேர்ந்து அடுத்து செய்வது என்ன என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
நாடு ஒரு கடுமையான நிலவரத்தை எதிர்நோக்குகிறது.அந்நாள் இந்நாள் அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும் மாபெரும் தேர்தல் மோசடி வேலையில் ஈடுபட்டு பேரரசருக்கும் மலேசியக் குடிமக்களுக்கும் எதிரான துரோகச் செயலைச் செய்திருக்கிறார்கள்.
குட்டிபூதம்: புரஜெக்ட் ஐசி பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்று என்று அன்வார் இப்ராகிம் கூறுவது நம்பத்தக்கதாகத்தான் இருக்கிறது.
அத்துடன் அத்திட்டம் மகாதிர் 2003-இல், பதவி இறங்கிய பின்னரும் தொடர்வதாக அவர் குறிப்பிட்டிருப்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது. அத்திட்டத்தை அப்துல்லா அஹமட் படாவியும் நஜிப் ரசாக்கும் தொடர்ந்தார்கள் என்பதை அன்வார் எப்போது அறிந்துகொண்டார்?
முன்பே அறிந்திருந்தால், அப்போதே அதை ஏன் அம்பலப்படுத்தவில்லை? பின்னர் ஒரு காலத்தில் தமக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்றுதான் ‘கமுக்கமாக’ வைத்திருந்தாரா?
அந்த வகையில் அவரது செயல் பிடிக்கவில்லை என்றாலும், சாபா ஆர்சிஐ-இடம் வாக்குமூலம் அளிக்கத் தயார் என்று அவர் முன்வந்ததைப் பாராட்டத்தான் வேண்டும். ஆர்சிஐ-இல் அவர் சொல்லப்போவதைக் கேட்க ஆவலாக உள்ளேன்.
ஒங்: அன்வார் அதில் பங்கேற்காமல் இருக்கலாம். அப்படிச் சொல்வதால், என்ன நடந்தது என்பது அவருக்குத் தெரிந்திருக்காது என்பது பொருளாகாது. துணைப் பிரதமராக இருந்த அவருக்கு நடந்தது தெரியாது என்பதை நம்ப முடியவில்லை.
நடந்தது தெரியும் என்றால் அவரும் புரஜெக்ட் எம்-முக்கு உடந்தையா, இல்லையா? தாம் துணைப் பிரதமராக இருந்தபோது நடந்த அவ்விவகாரத்தில் தமக்கு உடன்பாடு இல்லை என்றால் அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்தது உண்டா?
ஆர்சிஐ அழைப்பதற்காக (அப்படி நடக்கும் என்று தெரியவில்லை) காத்திருக்கும் வேளையில், அவ்விவகாரம் பற்றித் தமக்கு தெரிந்ததை நம்மிடம் அவர் தெரிவிக்கலாமே.
மாங்காய்டுரியான்: துணைப் பிரதமராக இருந்த அன்வார் அதைப் பற்றி அறியாமல் இருந்திருப்பாரா?
தெரிந்தும் அதை எதிர்க்காமல் இருந்ததற்காக அவரைக் குறை சொல்ல முடியுமா? முடியாது என்பதே என் கருத்து.
அதற்குப் பிரதமரே பொறுப்பு. மகாதிர்தான் தமக்கு அதில் நேரடித் தொடர்புண்டு என்று கூறியதுடன் அது சட்டப்பூர்வமானது என்று அதைத் தற்காத்தும் பேசியுள்ளாரே.
மீன்கொத்தி: மகாதிர் காலத்தில் தேசத் துரோகத்துக்கு இணையான குற்றச் செயல் ஒன்று நடந்துள்ளது என்ற ஐயப்பாடு வலுவடைந்து வருகிறது.
சாமான்ய மக்கள் திகைத்துப் போயுள்ளனர். இது எப்படிச் சாத்தியம்? நாட்டுக்கு என்ன வந்து விட்டது? மக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த வேண்டியவர்களே இப்படிப்பட்ட அப்பட்டமான குற்றங்களைப் புரிந்தால் எதிர்காலம் என்னவாகும்?
செம்பருத்தி: அன்வாரா, மகாதிரா என்றால், நான் அன்வாரைத்தான் நம்புவேன். புரஜெக்ட் ஐசி என்பது ஆட்சியில் நீடிப்பதற்கு மகாதிர் வகுத்த திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
மகாதிரின் திருகுதாளங்கள் ஒன்றா, இரண்டா. தலைமை நீதிபதி சாலே அப்பாஸையும் மற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் நீக்கியது, கட்சியில் தமக்கு எதிர்ப்பானவர்களைக் களையெடுக்க அம்னோ பாருவை உருவாக்கியது, ஐஎஸ்ஏ-யைத் தவறாக பயன்படுத்தியது, ஒபரேசன் லாலாங், இப்படி எத்தனையோ உண்டு.
இறைவனாக முயலாதே: குடியுரிமை பெற்றார்களே அவர்களின் நிலை என்ன? அவர்களின் குடியுரிமை பறிக்கப்படுமா(அதுதானே முறை)?
எதிர்வரும் தேர்தலில் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்களா? கடந்த மூன்று நான்கு பொதுத் தேர்தல்களில் பிஎன் ஆட்சியில் அமர அவர்கள் முக்கிய காரணம் என்பதை மறக்க வேண்டாம்.
எதுவும் செய்யவில்லை என்றால், அடுத்த தேர்தலிலும் பிஎன் ஆட்சியில் அமர அவர்கள் உதவியாக இருப்பார்கள். எனவே, வாக்காளர் பட்டியல் சரிசெய்யப்படுவது அவசியமாகும்.