பாஸ்: ‘அல்லாஹ்’ விஷயத்தில் மறு ஆய்வு கிடையாது

alkitabமுஸ்லிம் அல்லாதார் மலாய் மொழி பைபிள்களில் ‘இறைவன்’ (God) என்பதற்கு மொழிபெயர்ப்பாக ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்ற தனது முடிவை பாஸ் கட்சியின் Syura மன்றம் மறு ஆய்வு செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மன்றம் தனது நிலையை மறுபரிசீலினை செய்ய வேண்டும் என டிஏபி தலைபர் கர்பால் சிங் விடுத்த அறிக்கை மீது அது கருத்துரைத்தது.

“Syura மன்ற முடிவு இறுதியானது. இன்னொரு முடிவு என ஒன்றுமில்லை,” என மன்றச் செயலாளர் நிக் ஸாவாவி நிக் சாலே சொன்னதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

“கர்பால் புரிந்து கொள்ள வேண்டும். கொள்கைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முடிவு செய்வது Syura மன்றமாகும். ‘அல்லாஹ்’ விவகாரமும் கொள்கை விஷயமாகும்.”

பாஸ் கட்சி எப்படி இயங்குகிறது என்பது பற்றி புக்கிட் குளுகோர் எம்பிக்கு புரியவில்லை என்றும் அவர் குறை கூறியதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“”Ikut pandai dialah (அவர் அப்படியே இருக்கட்டும்) அந்த விஷயம் மீது இனிமேலும் கருத்துரைக்க நான் மென்மேலும் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. அந்த முடிவு இறுதியானது.”

அந்த மொழிபெயர்ப்பு பயன்படுத்தப்படுவதற்கு அனுமதிக்கும் பக்காத்தான் ராக்யாட் இணக்கத்தை பாஸ் கட்சி பரிசீலினை செய்ய வேண்டும் என்றும் Syura மன்ற முடிவை அல்ல என்றும் கர்பால் கேட்டுக் கொண்டதாக அதே நாளேடு அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.

“பக்காத்தான் ராக்யாட் பெரிய அமைப்பு. Syura மன்றம் பாஸ் கட்சிக்கு மட்டுமே உரித்தானது,” என கர்பால் சொன்னதாகவும் நேற்று அந்த ஏடு கூறியது.