ஜாவி இணையத் தளம் சிதைக்கப்பட்டது

jawiஜாவி எனப்படும் கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய விவகாரத் துறையின் இணையத் தளம் நேற்றிரவு சிதைக்கப்பட்டது.

சோபியா ஹானா என அழைக்கப்படும் என அந்தக் கொத்தர் ( hacker ) இமாம் முஸ்லிம் என அழைக்கப்படும் பாரசீக இஸ்லாமிய அறிஞரான முஸ்லிம் இப்ன் அல்-ஹாஜாஜ் பதிவு செய்த ஹடித் ( நபி முகமது சொன்னவை) ஒன்றை அந்த இணையத் தளத்தில் சேர்த்துள்ளார்.

இன்று காலை 9.00 மணி அளவில் அந்த இணையத் தளம் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரப்பட்டது.

கடந்த வாரம் இரண்டு பிகேஆர் கட்சியைச் சேர்ந்த ராபிஸி இஸ்மாயிலும் அஸ்மின் அலியும் தங்கள் இணையத் தளங்கள் சிதைக்கப்பட்டதாக புகார் செய்தனர்.

ராபிஸி தமது முகநூல் பக்கத்தில் தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடியிடம் மன்னிப்புக் கேட்டதாக போலியான செய்தி ஒன்றும் சேர்க்கப்பட்டிருந்தது.

அதே வேளையில் அஸ்மினுடைய இணையத் தளாம் சிதைக்கப்பட்டதுடன் இதை விட மோசமான இணையத் தாக்குதல்களுக்கு அது இரையாகலாம் என்றும் எச்சரிக்கப்பட்டது.