கடந்த மாதம் ஹிம்புனான் கெபாங்கித்தான் ரக்யாட் (அல்லது கேஎல்112)-இல் கலந்துகொண்ட ஆயுதப்படை வீரர்கள் அறுவருக்கு எதிராக “ஆயுதப் படைக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்திவிட்டதாக”க் குற்றம் சாட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படலாம்.
அறுவரில் ஐவர் அரச மலேசிய கடற்படையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் இராணுவத்தைச் சேர்ந்தவர்.
அவர்கள் 1972 ஆம் ஆண்டு ஆயுதப் படைச் சட்டத்தின் 86-வது பகுதியின்கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக பிகேஆர்-தொடர்புள்ள முன்னாள் ஆயுதப்படை வீரர்கள் சங்கமான பஹ்லாவான் தலைவர் அஸ்ரி புவாங் கூறினார்.
அவர்களின் குடும்பத்தார் பஹ்லாவானுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
அறுவரும் தாங்கள் பேரணியில் கலந்துகொண்டதைக் காண்பிக்கும் படங்களை முகநூலில் வெளியிட்டிருந்தனர். அதைக் கண்ணுற்ற மேலதிகாரிகள் அவர்களை விசாரணைக்கு அழைத்தனர்.
பேரணியில் கலந்துகொண்டபோது அவர்கள் கடமையில் இல்லை என்றும் ஆயுதப் படையினருக்கு உரிய சீருடை அணிந்திருக்கவில்லை என்றும் பஹ்லவான் கூறியது.