90 வயதைத் தாண்டிய வாக்காளர்கள் பற்றிய தகவல் இசி குளறுபடிகளை மீண்டும் அம்பலப்படுத்துகின்றது

merapபல ஆயிரக்கணக்கான அந்நியர்கள் வாக்காளர்களாக மாற்றப்பட்டது, ஆவி வாக்காளர்கள், இப்போது முதிர்ந்த வயதுடைய வாக்காளர்கள் ஆகிய தகவல்கள் வாக்காளர் பட்டியல் மீதான சந்தேகங்களையே அதிகரித்துள்ளன.”

நூறு வயதை எட்டியவர்கள் புதிய வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதை ஆய்வு கண்டு பிடித்துள்ளது

உங்கள் அடிச்சுவட்டில்: தேர்தல் ஆணையம் எப்போதும் கோமாளித்தனமான பதில்களையே கொடுக்கிறது. 90 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்காளாராக பதிந்து கொள்ளக் கூடாது என யாரும் சொல்லவில்லை. நீங்கள் ஏன் பிரச்னையை திசை திருப்புகின்றீர்கள்.

90 வயதைத் தாண்டியவர்கள் எப்படி தங்களை புதிய வாக்காளர்களாக பதிந்து கொள்ள முடியும் என்பதைப் பற்றித்தான் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் அவர்களில் பெரும்பாலோர் மிகவும் பலவீனமாக இருக்க வேண்டும்.

வாக்களிக்க விரும்பும் அத்தகைய மக்கள் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது ஏன் ? 90 வயதைத் தாண்டிய அனைவரையும் ஆய்வு செய்ய முடியாதா என்ன ?

தேர்தல் ஆணையத் (இசி) தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் அவர்களே, இசி-க்கு எதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை மறுக்க வேண்டாம் அல்லது மேலோட்டமாகப் பதில் கொடுக்க வேண்டாம். என்டி7ல் நீங்கள் கொடுத்த பதில் பதிலே இல்லை.

வாக்காளர் பட்டியலில் காணப்படுகின்றவர்கள் உண்மையில் அவர்களாகவே பதிந்து கொண்டவர்கள் எனத் தெரிவதாக நீங்கள் சொல்லியிருக்கின்றீர்கள். ஆனால் அதனை உறுதி செய்ய நீங்கள் ஏ பாரத்தைக் காட்ட முடியவில்லை.

அவர்களுடைய ஏ பாரத்தைத் தேடிக் கொண்டிருப்பதாக நீங்கள் சொல்கின்றீர்கள். நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். அந்த பாரங்களை கண்டு பிடிக்க எவ்வளவு நாட்கள் தேவைப்படும் ? நாங்கள் மறந்து விடுவோம் என எண்ண வேண்டாம்.

மெராப் என்ற மலேசிய வாக்காளர் பட்டியல் ஆய்வுத் திட்ட அமைப்புக்கு வாழ்த்துக்கள். வாக்காளர் பட்டியலில் காணப்படுகின்ற குழப்படிகளை முறியடிக்கும் நடவடிக்கைகளை பக்காத்தான் ராக்யாட்டும் அதே எண்ணம் கொண்ட அரசு சாரா அமைப்புக்களும் தொடர வேண்டும்.

லீஇஸட்: 146 வாக்காளர்கள் மட்டும் தானா – அவை உண்மையானவையா என்பதை நீங்கள் எளிதாகக் கண்டு பிடித்து விடலாமே ?

ஜியூடைஸ்: 90 வயதைத் தாண்டிய வாக்காளர் பற்றிய ஆய்வை நடத்திய போது சிலர் உயிருடன் இருப்பதையும் உண்மையான வாக்காளர்கள் என்பதையும் அறிந்து கொண்டதாக இசி சொல்கிறது.

ஏன் சிலர் மட்டுமே ? மற்ற வாக்காளர்கள் என்ன இறந்து விட்டனரா அல்லது உண்மையான வாக்காளர்கள் இல்லையா ? இருந்தும் வாக்காளர் பட்டியல் தூய்மையானது என இசி கூறிக் கொள்கிறது.

சராஜுன் ஹுடா: அந்த முதிர்ந்த வாக்காளர்களுக்கு இப்போது தான் அரசியல் விழிப்புணர்வு வந்திருக்க வேண்டும். இந்த முறை அந்த விழிப்புணர்வு அதிகமாக இருப்பதால் அவர்கள் இந்த முறை வாக்களிக்க முடிவு செய்திருக்க வேண்டும்.

அவர்கள் உண்மையான மனிதர்கள் என்றும் கல்லறைகளிலிருந்து எழுந்து வந்த ஆவிகளாக இருக்காது என நம்புவோம்.

Cogito Ergo Sum: உலகில் மிகவும் உயர்வான ஆயுள் காலத்தைக் கொண்ட நாடாக நாம் இருக்க வேண்டும். நீங்கள் ஏமாற்ற விரும்பினால் அதனை புத்திசாலித்தனமாகச் செய்யுங்கள். இப்படி மாட்டிக் கொள்ளக் கூடாது.

குரல் இல்லாதவன்: நான் இந்த யோசனையை முன் வைக்கிறேன்: காலமான உறவினர்கள் பற்றியும் வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்கள் பற்றியும் நாம் இசி இணையத் தளத்தில் சோதனை செய்ய வேண்டும்.  பின்னர் அவர்களுடைய பெயர்கள் அடையாளக் கார்டு எண்கள், வாக்களிப்பு மய்யங்கள் ஆகியவற்றை பக்காத்தானுக்கு தெரிவிக்க வேண்டும். போலி வாக்காளர்களைக் கண்டு பிடிக்கவும் கண்காணிக்கவும் அது உதவும்.

 

TAGS: