SUPP எனப்படும் சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி கடந்த சட்டமன்றத் தேர்தலில் அடைந்த தோல்வியிலிருந்து 13வது பொதுத் தேர்தலில் மீளுவதற்கு புதிய இளம் உறுப்பினர்களையும் தீவிர ஆதரவாளர்களையும் சார்ந்துள்ளது.
இவ்வாறு அந்தக் கட்சின் முன்னாள் தலைவர் டாக்டர் ஜார்ஜ் சான் கூறுகிறார்.
சமூகத்தில் உள்ள இளைய தலைமுறையினர் ஆதரவை ஒன்று திரட்டி கட்சியின் போராட்ட உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தினால் 13வது பொதுத் தேர்தலில் SUPP வெற்றி பெறுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு என அவர் சொன்னார்.
“நாம் ஏற்ற இறக்கங்களை அனுபவித்துள்ளோம். இப்போது எல்லா இளைஞர்களும் ஒன்று சேர முடிந்தால் நாம் ஏன் வெற்றி பெற முடியாது என்பதற்குக் காரணமே இல்லை,” என அந்தக் கட்சி கூச்சிங்கில் தனது தலைமையகத்தில் ஏற்பாடு செய்திருந்த சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் டாக்டர் சான் குறிப்பிட்டார்.
SUPP தலைவர்களுக்கு இடையில் பிளவுகள் காணப்படுவதாகக் கூறப்படுவது பற்றிக் குறிப்பிட்ட அவர், எந்த ஒரு அரசியல் கட்சியிலும் கருத்து வேறுபாடுகள் இயல்பானது, மற்ற பிஎன் உறுப்புக் கட்சிகளிலும் பிளவுகள் ஏற்பட்டுள்ளன என்றார்.