நிக் அஜிஸ்: அன்வார் பிரதமர் பொறுப்பை ஏற்பதை பாஸ் நிராகரிப்பதாகச் சொல்வது அபத்தம்

anwar13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் கூட்டணி வெற்றி பெற்றால் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் பிரதமர் பொறுப்பை ஏற்பதை பாஸ் கட்சியின் syura மன்றம் விரும்பாது எனக் கூறப்படுவதை அந்தக் கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் மறுத்துள்ளார்.

அத்தகைய பொய்கள் பக்காத்தான் தோழமைக் கட்சிகளுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தும் முயற்சி என அந்த syura மன்றத்தின் தலைவரும் கிளந்தான் மந்திரி புசாருமான நிக் அஜிஸ் சொன்னார். அந்த மன்றம் கட்சியின் கொள்கைகளை வகுக்கும் உயர்ந்த அமைப்பாகும்.

“அது அபத்தமானது. நான் அந்த syura மன்றத்தின் தலைவர். அதன் தொடர்பில் எதுவும் பேசப்படவே இல்லை,” என அவர் கோத்தா பாருவில் கூறினார்.anwar1

வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் வெற்றி பெற்றால் அன்வார்பிரதமர் பொறுப்பை ஏற்பதை பாஸ் கட்சியின் syura மன்றம் விரும்பாது என சில வட்டாரங்கள் சொன்னதாக மிங்குவான் மலேசியாவில் நேற்று வெளியான செய்தி குறித்து நிக் அஜிஸ் கருத்துரைத்தார்.

நோ ஒமார்: டிஏபி அன்வாரை நிராகரிக்கக் கூடும்

இதனிடையே வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் வெற்றி பெற்றால் அன்வார்பிரதமர் பொறுப்பை ஏற்பதை விரும்பாது எனக் கூறப்பட்டுள்ள பாஸ் கட்சியின் syura மன்றத்துடன் டிஏபி-யும் சேர்ந்து கொள்ளும் சாத்தியம் உள்ளதாக சிலாங்கூர் பிஎன் துணைத் தலைவர் நோ ஒமார் கூறியிருக்கிறார்.

anwar2குதப்புணர்ச்சி வழக்கு ஒன்றில் அன்வார் சம்பந்தப்பட்டுள்ளதற்கான ஆதாரம் தம்மிடம் இருக்கிறது என்றும்  அன்வார் பிரதமரானால் டிஏபி அதனை வெளியிடும் என்றும் அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் கர்பால் சிங் 1996ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கூறியது எல்லோருக்கும் தெரியும் என விவசாய, விவசாய அடிப்படைத் தொழில் அமைச்சருமான நோ சொன்னார்.

“அன்வார் பிரதமரானால் டிஏபி அந்த ஆதாரத்தை முன் வைக்கும் சாத்தியம் உண்டு,” என தஞ்சோங் காராங்கில் ஒரே மலேசியா அனுமதி உதவித் தொகை குறித்த விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் நிருபர்களிடம் கூறினார்.

வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் வெற்றி பெற்றால் அன்வார் பிரதமர் பொறுப்பை ஏற்பதை பாஸ் கட்சியின் syura மன்றம் விரும்பாது என மிங்குவான் மலேசியாவில் நேற்று வெளியான செய்தி குறித்து நோ கருத்துரைத்தார்.

என்றாலும் அந்த விவகாரம் மீது மன்றத்தின் நிலையை உறுதி செய்ய முடியவில்லை எனக் குறிப்பிட்ட அந்த ஏடு பல மன்ற உறுப்பினர்கள் அண்மையில் கலந்து கொண்ட ரகசிய விவாதத்தில் அந்த விஷயம் பேசப்பட்டதாக தெரிவித்தது.

பெர்னாமா