எஸ்ஏபிபி, பிகேஆர் சின்னத்தில் போட்டியிடத் தயார் ஆனால்….

yongவரும் பொதுத் தேர்தலில் எதிர்த்தரப்புக் கூட்டணி வெற்றி பெற்றால் சபாவுக்கு சுயாட்சி உரிமை வழங்குவதாக எதிர்த்தரப்புத் தலைவரும் பிகேஆர் மூத்த தலைவருமான அன்வார் இப்ராஹிம் வாக்குறுதி அளித்தால் பிகேஆர் சின்னத்தில் போட்டியிடுவதற்கு எஸ்ஏபிபி என்ற சபா முன்னேற்றக் கட்சியின் தலைவர் யோங் தெக் லீ தயாராக இருக்கிறார்.

சபா சியாட்சியே தமது கட்சியின் முக்கியப் போராட்டம் என வலியுறுத்திய அந்த முன்னாள் சபா முதலமைச்சர் அது குறித்து பேரம் பேச முடியாது என்றார்.

சபா மாநில அரசாங்கத்தை சபா மக்களே முடிவு செய்ய வேண்டும் கோலாலம்பூர் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

“நாம் இட ஒதுக்கீடு பற்றி பேச்சு நடத்தலாம். ஆனால் சபா சுயாட்சி பற்றி பேரம் பேச முடியாது. அன்வார் சபா சுயாட்சிக்கு வாக்குறுதி அளித்தால் யோங் தெக் லீ என்ற நான் கூட பிகேஆர் சின்னத்தில் போட்டியிட முடியும்.”

கோத்தா கினாபாலுவுக்கு அருகில் உள்ள எஸ்எம் கியான் கோக் மண்டபத்தில் எஸ்ஏபிபி ஏற்பாடு செய்துள்ள சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பின் போது யோங் நிருபர்களிடம் பேசினார்.

வரும் பொதுத் தேர்தலில் எஸ்ஏபிபி பக்காத்தான் ராக்யாட்டுடன் இணைவதையும் இட ஒதுக்கீட்டில் சமரசம் செய்து கொள்வதையும் காணத் தாம் விரும்புவதாக அன்வார் கூறியுள்ளது பற்றிக் கருத்துரைத்த யோங் அவ்வாறு கூறினார்.

பெர்னாமா