தென் கொரிய பாப் இசைப் பாடகர் Psy-யைக் கொல்ல முயற்சி செய்யப்பட்டதாக பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயாவ் இப்போது கூறியிருக்கிறார். அதனால் தான் கடந்த திங்கட்கிழமை ஹான் சியாங் கல்லூரியில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பின் போது ‘lo shang’ நிகழ்ச்சி முடிந்ததும் மேடையிலிருந்து வெளியேறுமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.
“Psy-யைக் கொல்ல முயற்சி செய்யப்பட்டதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்தது என போலீசார் எங்களிடம் தெரிவித்தனர். அதனால் தான் மேடையிலிருந்து சற்று தொலைவில் கூட்டத்தினர் நிறுத்தப்பட்டனர்.”
“போலீசாரும் விரைவாக முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. ‘lo shang’ நிகழ்ச்சிக்குப் பின்னர் உடனடியாக மேடையிலிருந்து இறங்கி விடுமாறு நஜிப்பிடம் தெரிவிக்குமாறும் போலீசார் எங்களிடம் கூறினர்,” என இன்று ஜெலுத்தோங்கில் கெரக்கான் கட்சியின் சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர் தெங் நிருபர்களிடம் விளக்கினார்.
நஜிப்பைக் கொலை செய்வதற்கு முயற்சி செய்யப்பட்டதாக சின் சியூ நாளேட்டில் வெளிவந்த செய்தி உண்மை அல்ல எனக் குறிப்பிட்ட தெங், தாம் ‘தவறாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளதாக’ தெரிவித்தார்.
பார் ஜா சாங் என்ற Psy, நஜிப், பிஎன் தலைவர்களுடன் மேடையில் ‘lo shang’ நிகழ்ச்சியில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதை விளக்குவதற்கும் கெரக்கான் தலைமைச் செயலாளருமான அவர் முயற்சி செய்தார்.
Psy நஜிப்புடன் சேர்ந்து கொள்வதற்கு மறுத்தார் எனச் சொல்லப்படுவதையும் தெங் நிராகரித்தார். அன்றைய தினம் அந்த நிகழ்வில் பங்கு கொள்ளுமாறு அறிவிப்பாளர் அந்தத் தென் கொரியக் கலைஞரை அழைத்துக் கொண்டிருந்த வேளையில் பிஎன் தலைவர்களிடயே ஒரளவு குழப்பம் காணப்பட்டது என அவர் சொன்னார்.
“உண்மையில் சில கோளாறுகள் ஏற்பட்டன. அறிவிப்பாளர் Psy-யை அறிமுகம் செய்யும் பணியை மட்டுமே செய்ய வேண்டும். அவரை மேடைக்கு வருமாறு கேட்டுக் கொள்ள வேண்டிய தேவை இல்லை. யாரோ ஒருவர் அதனைச் செய்யுமாறு தமக்கு ஆணையிட்டதாக அறிவிப்பாளர் பின்னர் என்னிடம் கூறினார்.”
“அவரது பணி அதிகாரப்பூர்வமானதாகும். ஆனால் நான் அவரை குற்றம் சொல்ல மாட்டேன்,” என்றார் தெங்.
Psy மேடைக்கு வரும் முன்னர் கூட்டத்தினருடைய உனர்வுவுகளைத் தூண்டி விடுவது அறிவிப்பாளருடைய வேலையாகும். ‘lo shang’ பற்றி Psyக்கு எதுவும் தெரியாததால் அவருக்கு அது பற்றி விளக்க வேண்டியிருந்ததால் அவர் வருவதற்குச் சற்று தாமதமாகி விட்டது,” என அவர் மேலும் கூறினார்.
“அத்துடன் Psy நிகழ்ச்சிகளில் அது ஒன்றல்ல. அதனால் தான் மேடைக்கு வருவது பற்றி அவரிடம் ஒன்றும் தெரிவிக்கப்படவில்லை,” என தெங் குறிப்பிட்டார்.
பிஎன் சீனப் புத்தாண்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக Psy கலந்து கொண்டார். அவர் நஜிப், அவரது மனைவி ரோஸ்மா மான்சோர், அவர்களது பிள்ளைகள், பிஎன் தலைவர்கள் முன்னிலையில் தமது உலகப் புகழ் பெற்ற ‘Oppa Gangnam Style’ இசை நடனத்தைப் படைத்தார்.
அந்த நிகழ்வில் 30,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். Psy நிகழ்ச்சி முடிந்ததும் பலர் வெளியேறி விட்டனர். நஜிப்பையும் மற்ற பிஎன் தலைவர்களையும் சிறிய எண்ணிக்கையில் இருந்த கூட்டத்தினரே வழியனுப்பி வைத்தார்கள்.
மேடையில் காத்திருந்தனர்
அந்த ‘lo shang’ அல்லது (yee sang) நிகழ்வின் போது பிஎன் தலைவர்கள் Psy வருகைக்காக மேடையில் காத்துக் கொண்டிருந்தனர். அறிவிப்பாளருடைய அறிவிப்புக்குப் பின்னர் அவர்கள் கை தட்டியதுடன் சுற்றிலும் பார்த்தனர். ஆனால் இறுதியில் Psy இல்லாமல் அந்தப் பாரம்பரிய உணவை toss செய்யும் நிகழ்வு நடத்தப்பட்டது.
அவர்களுடன் சேர்ந்து கொள்வதற்கு Psy வராததைத் தொடர்ந்து பிஎன் தேசியத் தலைவரான நஜிப், முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி ஆகியோர் மேடையிலிருந்து இறங்கினர்.
ஆகவே Psy-யைக் கொல்வதற்கு முயற்சி செய்யப்பட்டதாக கூறப்படும் விளக்கம் பொருத்தமானதாகத் தெரியவில்லை. காரணம் அவர் தமது பிரபலமான நான்கு நிமிடப் பாடலை இரண்டு முறை படைப்பதற்கு அனுமதிக்கப்பட்டார்.