அன்வார்: பாக்கத்தான் ஆட்சியில் அனைத்து பிரச்னைகளும் தேசியப் பிரச்னைகளாக கருதப்படும்

debate_with_anwar01பாக்கதான் ரக்யாட் மக்கள் சார்புடைய ஜனநாயகத்தை நீதியை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகள் மூலம் உருவாக்கும் என்று பாக்கத்தான் தலைவர் அன்வார் இப்ராகிம் நேற்று இரவு கூறினார்.

செம்பருத்தி இணையத்தள ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் நாளிதழ்களுடான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பேசிய அன்வார் இப்ராகிம் இனங்களுக்கிடையிலான பிளவுகள் அகற்றப்படுவதோடு எந்த ஒரு பிரச்னையும் மலேசிய பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படும் என்பதை வலியுறுத்தினார்.

“இந்தியர் பிரச்னை என்றோ, தமிழர் பிரச்னை என்றோ இருக்காது – அனைத்துப் பிரச்னைகளும் தேசியப் பிரச்னைகள் என்று கருதப்படும்”, என்று அவர் மேலும் கூறினார்.

நேற்று கிள்ளான், மிட்லண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் இரவு மணி 8.00 க்கு தொடங்கிய அன்வார்-தமிழ் ஊடகங்கள் நிகழ்ச்சியில் 2,000-க்கும் கூடுதலான மக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு போக்குவரத்து ஏற்பாடுகள் அல்லது பண உதவிகள் எவையும் ஏற்பாட்டாளர்களால் வழங்கப்பட்டவில்லை. பொதுப் போக்குவரத்து வசதியற்ற அவ்விடத்திற்கு மக்கள் தங்களுடைய சொந்தச் செலவிலே வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்debate_with_anwarவார் இப்ராகிம் – தமிழ் ஊடகங்கள் நிகழ்ச்சியில் தமிழ் நேசன், மலேசிய நண்பன், மக்கள் ஓசை மற்றும் தினக்குரல் ஆகிய நாளிதழ்களின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொது மக்களுடன் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். மனோகரன், ஆர். சிவராசா மற்றும் நெகிரி செம்பிலான் சட்டமன்ற உறுப்பினர் ரவி ஆகியோரும் இருந்தனர்.

அன்வார் இப்ராகிம் – தமிழ் ஊடகங்கள் நிகழ்ச்சியை வழிநடத்திய சுவாராம் தலைவரான கா. ஆறுமுகம் அந்நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு அன்வார் உடனடியாக சில முக்கிய கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அன்வாரை கேட்டுக்கொண்டார்.

debate_with_anwar03காலப்போக்கில் அரசாங்க அமைப்புகள் பாரிசான் அரசாங்கத்தின் கைப்பாவையாகியுள்ளன. தற்போது, அரசாங்க அமைப்புகள் அனைத்திலும் இனவாதம் ஓர் அமைப்பு முறையாகி இருக்கிறது. இச்சூழ்நிலையில் முனியாண்டி மற்றும் பொன்னம்மா போன்ற சாதாரண தமிழர்களின் பிரச்னைகளை எப்படி கையாளப் போகிறீர்  என்று ஆறுமுகம் அன்வாரிடம் வினவினார். அன்வார் இதற்கு இந்நிகழ்ச்சியின் போது எதிர்வினையாற்ற வேண்டும் என்றாரவர்.

மக்களை எதிர்கொண்டுள்ள இது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில்  தலைமைத்துவத்தின் அரசியல் திண்மை மற்றும் கொள்கை அமலாக்கத்தில் உறுதிப்பாடு ஆகியவற்றில் அடங்கியுள்ளது என்பது அன்வாரின் பதிலாக அமைந்தது.

“பிரச்னைகள் இருக்கும். ஆனால் கடப்பாடு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் மூலம் தீர்வுகளும் சாத்தியமே” என்று கூறிய அவர், தமக்கு அரசு பொதுச் சேவை மீது நம்பிக்கை இருக்கிறது. மனச்சாட்சி உடைய உறுதியான தலைவர் இனவாதப் பிளவுகளுக்கு அப்பால் பிரச்னைகளை கலைவதற்கு அரசு ஊழியர்கள இயக்க முடியும் என்றார்.

புக்கு ஜிங்கா அடிப்படையில் வகுக்கப்படும் விரிவான கொள்கைகள் அடிப்படை பிரச்னைகளைத் தீர்க்க உதவும் என்று அன்வார் மேலும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ் நாளிதழ்களின் ஆசிரியர்களும் இதர பங்கேற்பாளர்களும்   வலுவான, உறுதியான கேள்விகளத் தொடுத்தனர். அவற்றுக்கு அன்வார் பதில்கள் அளித்தார்.

முழு விபரம் பின்னர்.