2012ம் ஆண்டுக்கான பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் (சொஸ்மா) கீழ் கைது செய்யப்பட்ட முகமட் ஹில்மி ஹஷிம், தாம் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படுள்ளதாக கூறி தமது வளர்ப்புத் தயார் வழி ஹேபியஸ் கார்ப்புஸ் பாதுகாப்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
சொஸ்மா அரசமைப்புக்கு முரணான சட்டம் என்றும் தமது வளர்ப்பு மகன் அந்தச் சட்டத்துக்கு இணங்க கைது செய்யப்படவில்லை என்றும் 58 வயதான ராஹாமா அப்துல் மஜித் என அந்த ஹேபியஸ் கார்ப்புஸ் மனுவிலும் அபிடவிட்டிலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முகமட் ஹில்மி கைது செய்யப்பட்டது தவறான நோக்கத்தைக் கொண்டது என்று கூறிக் கொண்ட ராஹாமா, ஹில்மி சொஸ்மாவில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என நம்புவதற்கு அது காரணம் அல்ல என்றார்.
விசாரிக்கப்படுவதற்காக ஹில்மி கைது செய்யப்படவில்லை என்றும் ஹில்மியின் முதலாளியும் முன்னாள் இசா கைதியுமான யாஸிட் சுபாட்டுக்கு எதிராக ஒரு சாட்சியாக இருக்கும் பொருட்டு அதிகாரிகள் அவரைப் பயன்படுத்துகின்றனர் என்றும் அவர் சொன்னார். யாஸிட பிப்ரவரி 7ம் தேதி ஹில்மியுடன் கைது செய்யப்பட்டார்.
“விண்ணப்பதாரரான ஹில்மி குற்றத்தை ஒப்புக் கொண்டு யாஸிட் வழக்கில் போலீஸ் சாட்சியாக மாறுவதற்கு வற்புறுத்தும் நோக்கத்துடன் போலீசார் என்னை மருட்டுவதாகவும் பயன்படுத்துவதாகவும் நான் கருதுகிறேன்,” என அந்த அபிடவிட்டில் கூறப்பட்டுள்ளது.
ஹில்மியை மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராமுடன் தொடர்புடைய வழக்குரைஞர் பாடியா நாட்வா பிக்ரி, வான் ஹிடாயாத்தி நாடிரா, நியூ சின் இயூ ஆகியோர் பிரதிநிதித்தனர்.
ஹில்மி தமது விண்ணப்பத்தில் ஜிஞ்சாங் தடுப்புக் காவல் மய்யத்தில் வார்டனையும் தேசியப் போலீஸ் படைத் தலைவரையும் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து ஏழு நாட்களுக்குள் விசாரணைத் தேதியை நீதிமன்றம் நிர்ணயிக்க வேண்டும் எனப் பாடியா தெரிவித்தார்.