கோலா திரெங்கானுவில் சுல்தான் மிசான் ஸ்டேடியத்தின் எஃகுக் கூரை இன்று காலை இடிந்து விழுந்ததில் கட்டுமானத் தொழிலாளர்கள் மூவர் காயமடைந்தனர்.
இது ஏற்கனவே 2009-இல் இடிந்து விழுந்த கூரைதான். அந்தக் கூரைப்பகுதியைப் பழுதுபார்க்கும் வேலை கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அது மீண்டும் இடிந்து விழுந்தது.
அச்சம்பவம் காலை மணி 11.30க்கு நிகழ்ந்ததாக ஸ்டார் ஆன் லைன் கூறியது. காயமுற்ற தொழிலாளர் மூவரும் மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர்.
சுல்தான் மிசான் அபிடின் ஸ்டேடியம் கிழக்குக் கரையில் உள்ள மிகப் பெரிய விளையாட்டரங்கமாகும். அது 2008 சுக்மா விளையாட்டுகளுக்காக ரிம270 மில்லியன் செலவில் கட்டப்பட்டது.