பிஎன் கையெழுத்திட்டுள்ள நேர்மை வாக்குறுதி ‘திசை திருப்பும்’ நாடகம் என்கிறது டிஏபி

BNபிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமையில் பிஎன் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ள நேர்மை வாக்குறுதி, ஊழல் என்னும் உண்மையான பிரச்னையிலிருந்து மக்களைத் ‘திசை திருப்பும்’ நாடகம் என டிஏபி துணைத் தலைவர் தான் கோக் வாய் சாடியிருக்கிறார்.

TI-M என்ற மலேசிய அனைத்துலக வெளிப்படை அமைப்பு தயாரித்துள்ள அந்த வாக்குறுதி ” வெறும் சமூக ஒப்பந்தமே, அது சட்ட ரீதியாக யாரையும் கட்டுப்படுத்தாது, கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை.”

“பிஎன் அரசாங்கத்தின் உண்மையான தோல்விகளிலிருந்தும் ஊழலை தடுப்பதில் அதன் மோசமான அடைவு நிலையிலிருந்தும் மக்களுடைய கவனத்தைத் திசை திருப்புவதற்காக நடத்தப்பட்ட அரசியல் மாயாஜாலம் அது என நான் சொல்ல விரும்புகிறேன்.”

பிஎன் அரசாங்கமும் அதன் தலைவர்களும் தூய்மையானவர்களாகத் தெரியாத போதும் பொதுத் தேர்தலின் போது தாங்கள் உண்மையில் ஊழலை எதிர்த்துப் போராடப் போவதாக மக்களை ஏமாற்றுவதற்கும் முட்டாளாக்குவதற்கும் நடத்தப்பட்ட ஏற்பாடு அதுவாகும்,” என தான் இன்று நிருபர்களிடம் கூறினார்.