அத்துமீறியதாகச் சொல்லப்படுவதை பிபிபி மறுத்துள்ளது

pppஒர் அவதூறு கட்டுரை எனக் கூறப்பட்டதின் தொடர்பில் பிபிபி என்ற மக்கள் முற்போக்குக் கட்சி உறுப்பினர்கள் கோலாலம்பூர் ஜாலான் ஈப்போவில் உள்ள மலேசிய நண்பன் தலைமையகத்தில் அத்துமீறி நடந்து கொண்டதாக அந்தத் தமிழ் நாளேடு சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை அந்தக் கட்சி இன்று மறுத்துள்ளது.

மலேசிய நண்பன் புதன் கிழமை பதிப்பில் வெளியான ஒரு கட்டுரை குறித்து விளக்கம் பெறுவதற்கு  அந்த நாளேட்டின் நிர்வாக இயக்குநர் ஷாபீ ஜாமான் சிக்கந்தர் பாட்சா அழைத்ததின் பேரில் பிபிபி உறுப்பினர்களும் தலைவர் எம் கேவியஸும்  தலைமையகத்துக்குச் சென்றதாக அந்தக் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் ஹாரிட்ஸ் மோகன் கூறினார்.

பிஎன் உறுப்புக் கட்சிகளில் ஒன்றான பிபிபி, தேவைப்படுகின்றவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை இலவசமாக விநியோகம் செய்வதாக குறிப்பிட்டு அத்தகைய நடவடிக்கை இந்திய சமூகத்தின் வாக்குகளை பிஎன் பக்கம் ஈர்ப்பதற்கு சாதகமாக இருக்குமா என அந்தக் கட்டுரை கேள்வி எழுப்பியிருந்ததாக கூறப்படுகின்றது.ppp1

அந்த தினசரியின் நிருபர் எல்கே ராஜை உறுப்பினர்கள் மருட்டியதாகவும் அவருக்கு காயங்களை ஏற்படுத்தியதாகவும் அந்த ஏடு கூறிக் கொள்வதையும் ஹாரிட்ஸ் மறுத்தார்.

கடந்த ஆண்டு தொடங்கிய கட்சியின்  ‘LET’S FEED’ (தேவைப்படுவோருக்கு உணவு அளிப்போம்) திட்டத்தின் கீழ் இலவச உணவு விநியோகம் செய்யப்படுவதாக அவர் விளக்கினார்.

நாடு முழுவதும் இன, சமய, குடியுரிமை வேறுபாடின்றி தேவைப்படும் மக்களுக்கு சைவ உணவு வழங்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.

ppp2“அதற்கான மய்யம் கோத்தா ராஜா தொகுதியில் உள்ள கிள்ளான் தாமான் செந்தோசாவில் அமைந்துள்ளது.  நாங்கள் அரசியல் ரீதியில் செயல்பட வேண்டும் என்றால் நாங்கள் அந்த மய்யத்தை பத்து தொகுதியில் அமைத்திருப்போம். ஏனெனில் நாங்கள் போட்டியிடுவதற்கான இலக்கு அந்தத் தொகுதியாகும். ஆனால் நாங்கள் அதனைச் செய்யவில்லை. காரணம் அது எங்களுடைய மனித நேய முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டது,” என்றார் அவர்.

பத்திரிக்கை என்ற முறையில் எந்த ஒரு விஷயம் பற்றியும் எழுதுவதற்கு ஒவ்வொரு அமைப்புக்கும் உரிமை உண்டு. ஆனால் அதே நேரத்தில் அது நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். வலுவான ஆதாரம் இல்லாமல் மற்றவர்களுடைய தோற்றத்துக்கு கண்மூடித்தனமாக களங்கம் கற்பிக்கக் கூடாது என ஹாரிட்ஸ் மேலும் சொன்னார்.

பெர்னாமா

TAGS: