காணொளி குறித்து அம்னோ தலைமைச் செயலாளர் ஆத்திரம்

1icபிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர்,  நேற்றுத் தமக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த ஒரு காணொளி சித்திரிப்பதுபோல், பிஎன் வெளிநாட்டவருக்கு அடையாள அட்டைகளை வழங்கியதில்லை என்று மறுத்துள்ளார்.

1ic1விவேகக் கைபேசி வழி தமக்கு அனாமதேயமாக அனுப்பி வைக்கப்பட்டிருந்த அக்காணொளி  மாற்றரசுக் கட்சியின் வேலையாகத்தான் இருக்க வேண்டும் என்றாரவர். அந்தக் காணொளி யு-டியுப்பிலும் கிடைக்கிறது.

“நாங்கள் அதைச் செய்யவில்லை…..அவர்களுக்கு வேறு வேலை இல்லையா? இது ஒரு அசிங்கமான வேலை”, என்று நேற்று தொடர்புகொண்டபோது புத்ரா ஜெயா எம்பி-யுமான அவர் தெரிவித்தார்.

59 வினாடிகள் ஓடும் அக்காணொளியில் சிலர்-வங்காளதேசிகள் போல் தெரிகிறது- “போலீஸ்” என்று அலறிக்கொண்டு ஓடுகிறார்கள்.

அடுத்த காட்சியில் அவர்கள் தரையில் குந்தி இருக்கிறார்கள். ஒரு போலீஸ் அதிகாரி வருகிறார்.  “ஏனய்யா ஓடுறீங்க?  அடையாள அட்டை கொடுக்கத்தானே வந்தேன்”, என்கிறார்.

“அந்தக் குரல் போலீசுடையது அல்ல, வேறு யாருடையதோ.” என்று தெங்கு அட்னான் கூறினார்.

1ic2பின்னர் காணொளியில் “நீங்கள் எனக்கு உதவுங்கள். நான் உங்களுக்கு உதவுகிறேன்” என்ற சொற்கள் தெரிகின்றன.

அதனை அடுத்து, “ஆச்சரியம் கொள்ளாதீர்கள். பிஎன் ஆட்சியில் அந்நிய தொழிலாளர்களும் வாக்களிக்கலாம்” என்ற வாக்கியம்.

இறுதியில், “பிஎன்னுக்கு ‘இல்லை’என்று சொல்லுங்கள்”, என்ற சொற்கள் கூடவே, குறுக்குக் கோடு போடப்பட்ட பிஎன் கொடி.

தெங்கு அட்னான் மலேசியாகினிக்கு இந்தக் காணொளியை அனுப்பி வைத்திருந்தார். யு-டியுப்பில் உள்ள காணொளியையும் மலேசியாகினி பார்த்தது. யு-டியுப்பில் உள்ள காணொளியில் “Slander” (அபாண்டம்) என்ற சொல்லும் நெடுகிலும் வருகிறது.

யு-டியுப் காணொளியில் அம்னோ அந்தச் சொல்லை இணைத்ததாக தெங்கு அட்னான் ஒப்புக்கொண்டார்.

யு-டியுப் காணொளி, “இது எவ்வகையிலும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற நினைப்போரின் வேலை” என்ற சொற்களுடன் முடிகிறது.

இதன் தொடர்பில் போலீசில் புகார் செய்யப்படுமா என்று வினவியதற்கு முதலில் அம்னோ மற்றும் பிஎன் தலைமையிடம் தெரிவிக்க வேண்டும். மற்றதைப் பிறகுதான் யோசிக்க வேண்டும் என்றார்.

 

TAGS: