உங்கள் கருத்து: ‘சினார் ஹரியான் எதற்கு முந்திக்கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும். அது பின்னால் மன்னிப்பு கேட்டால் போதும். கட்டுரையை வெளியிட்டிருந்ததுதான் அது.. ஆனால், எழுதியது அதுவல்லவே’
‘இனவாதக் கட்டுரைக்காக சினார் ஹரியான் மன்னிப்பு கேட்டது
அப்சலோம்: நாளேட்டின் செய்தி நிர்வாக ஆலோசகர் அப்துல் ஜலில் அலி,(கட்டுரையை எழுதிய பத்தி எழுத்தாளர் ரிதுவான் சார்பில்) பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டது பாராட்டத்தக்கது.
எழுத்தாளர்கள் குறிப்பிட்ட வாசகர் வட்டத்தை இலக்கு வைத்துத்தான் எழுதுவார்கள். இங்கு ரிதுவானின் இலக்கு சாமானிய மலாய்க்காரர்கள். அவர்களை மற்ற இனத்தவர்மீது ஆத்திரம்கொள்ள வைப்பதே அவரின் நோக்கம்.
கட்டுரையை வாசிக்கும் இந்தியர்களும் சீனர்களும் சினமுறுவார்கள் என்பதையும் அவர் அறிவார். அவர் விரும்புவதும் அதுதானே. இனங்களிடையே வெறுப்பைத் தூண்டிவிட்டு அவர்கள் அடித்துக்கொள்வதை வேடிக்கைப் பார்க்க விரும்புகிறார்.
இதுவா ஒரு நல்ல முஸ்லிமுக்கு அடையாளம்? நான் அப்படி நினைக்கவில்லை. அவரை ஒரு நல்ல மனிதராகக்கூட நினைக்க மாட்டேன். அவரைப் போன்றவர்களால் சமயத்திற்குத்தான் கெட்ட பெயர்.
ஆப்பா நாமா: எந்த என்ஜிகள் எழுத்தாளரைத் தேடித்தான் சென்றிருக்க வேண்டும். அவர் ஒரு மலாய்க்காரர் என்று கூறப்பட்டாலும் உண்மையில் மலாய்க்காரர் அல்ல.
சினார் ஹரியான் எதற்கு முந்திக்கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும். அது பின்னால் மன்னிப்பு கேட்டால் போதும். கட்டுரையை வெளியிட்டிருந்தது அது . ஆனால், எழுதியது அதுவல்லவே.
ரிதுவான் மன்னிப்பு கேட்பாரா? மற்றவர்கள் நினைப்பதைத்தான் சொன்னேன் என்று அவர் வாதாடக்கூடும்.
1234567: ஜலில் உளபூர்வமாகத்தான் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அவர் மற்றவரின் உணர்வுகளை மதிப்பவர், அமைதியானவர், அடக்கமானவர். அவரைப் போன்றவர்கள்தான் மலேசியாவுக்குத் தேவை.
ரிதுவானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர் பத்தி எழுதத் தடை விதிக்க வேண்டும்.
சோலாரிஸ்: சினார் ஹரியான் மன்னிப்பு கேட்டதை நம்புகிறேன். இன்றைய நிலையில் ஆளும் கட்சி, மாற்றரசுக்கட்சி என இரு தரப்புச் செய்திகளையும் கொடுக்கும் ஒரே நாளேடு அதுதான். அதை வாங்கிப் படியுங்கள். நான் ஒவ்வொரு நாளும் அதை வாசிக்கிறேன்.
கேஎஸ்என்: சொன்னால் மட்டும் போதாது, சினார் ஹராபான். சொல்வதைச் செயலில் காட்டுக. மக்களிடையே இணக்கத்தை வளருங்கள், அவர்களைப் பிளவுபடுத்தி அழிக்கப் பார்க்காதீர்கள்.இவரைப் போன்ற வெறியர்கள் உங்களுக்கு வேண்டாம்.
பெயரிலி #37634848: இந்நாட்டில் முஸ்லிம்கள் சகிப்புத்தன்மை மிக்கவர்கள் என்பதைக் காண்பித்துதான் ரிதுவானின் நோக்கம் என்று நினைக்கிறேன்.
எல்லாரும் பேசுவதையும் முஸ்லிம்கள் நினைப்பதையும்தான் அவர் சொன்னார்.
இந்தியாவைப் பாருங்கள், இந்து தீவிரவாதிகள் பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த பாப்ரி பள்ளிவாசலை இடித்தார்கள். ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றார்கள்.
மலேசியாவில் ஆயிரக்கணக்கான இந்து ஆலயங்கள் உள்ளன. அரசாங்கமே பல ஆலயங்களுக்கு நிதி உதவி அளித்துள்ளது.இதையெல்லாம் முஸ்லிம்கள் பொறுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதைத்தான் ரிதுவான் சொல்ல வந்தார். சில தீவிரவாதிகள் அந்த உண்மையைத் திரித்துக்கூறி அந்த இஸ்லாமியக் கல்விமானைப் பற்றித் தப்பாக பேசுகிறார்கள்.
நம்பாதவன்: இப்படிப்பட்டவர்கள் சமய வெறுப்பை உண்டுபண்ணி அதன் விளைவாக இந்தியா போன்ற நாடுகளில் நிகழ்ந்தது இங்கும் நிகழக்கூடாது என்றுதான் மலேசியர்கள் விரும்புகிறார்கள்.
ஹங் துவா: மலேசியாவின் ஒற்றுமை கருதி ரிதுவான் டீ அப்துல்லா போன்றவர்களுக்கு ஊடகங்களில் இடமளிக்கக்கூடாது.
ரிதுவான் டீ, நானும் ஒரு முஸ்லிம்தான். ஆனால், உங்கள் கருத்துடன் நான் என்றுமே ஒத்துப்போவதில்லை.
அவருடைய கட்டுரையை விமர்சித்திருந்த முகம்மட் சித்திக் என்பார் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது பற்றி முஸ்லிம்-அல்லாதார் ஆத்திரமடைவது பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
வெள்ளிக்கிழமைகளில் அவர்களுக்கு மட்டும்தானா செளகரியக் குறைவு. அம்புலன்ஸ் வண்டிகள்கூடத்தான் சிக்கிக் கொள்கின்றன. முஸ்லிமாகிய உங்களுக்கு ஜூமா தொழுகை பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும், எதற்காகக் கடைசி நேரம்வரை காத்திருந்து சாலையைப் பயன்படுத்தும் மற்றவர்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் கண்ட இடத்தில் காரை நிறுத்திவிட்டுச் சமயக் கடமையை நிறைவேற்றச் செல்ல வேண்டும்.
இது ஒரு முஸ்லிமுக்கு அழகா? பிறப்பால் முஸ்லிம்களாக இருப்பவர்களைவிட தங்களுக்குத்தான் அதிக சமயப்பற்று உள்ளதுபோல் பாவனை செய்யும் மதம் மாறி வந்த இந்த அரைவேக்காடுகள் குறித்து அலட்டிக்கொள்ள வேண்டாம். விடுங்கள்.