பேராக் மக்கள் பிஎன் மந்திரி புசார் யார் என்னும் பிரச்னையைத் தீர்த்து விடுவர்

nazri‘நஸ்ரி அவர்களே, மந்திரி புசார் பதவி பற்றியோ அல்லது அமைச்சராக வருவது பற்றியோ சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. நல்ல எதிர்த்தரப்பாகத் திகழ தயாராகுங்கள்”

மூன்று அமைச்சர்கள் மந்திரி புசார் பதவி மீது ‘மோகம்’ கொள்ளவில்லை

பல இனம்: பிஎன் கவலைப்பட வேண்டியதில்லை. பிஎன் -னுக்கு அந்த தலைவலி ஏற்படாமல் இருப்பதை பேராக் மக்கள் உறுதி செய்வர்.

2008ல் பக்காத்தான் ராக்யாட்டிடம் இருந்த அந்த உரிமையை பேராக் மக்கள் மீண்டும் அதனிடம் வழங்குவர். அந்த உரிமையை பிஎன் பறித்துக் கொண்டு விட்டது.

சட்டமன்ற இடங்களிலும் நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பக்காத்தானுக்கு பேராக் மக்கள் இந்த முறை மகத்தான வாக்குகளை அளித்து அது போன்ற நிலைமை மீண்டும் ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்வார்கள்.

முஷிரோ: பேராக் மந்திரி புசார் பொறுப்பை ஏற்பதற்கு முன்மொழியப்படும்-பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ், தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹனிடி, இரண்டாவது நிதி அமைச்சர் ஹுஸ்னி ஹனாட்ஸாலா- ஆகியோர் தேர்தலில் பேராக் மக்களால் நிராகரிக்கப்படும் அபாயம் அதிகமாக உள்ளது.

மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேட்பாளர் பிஎன் -னிடம் இல்லை என்பதே உண்மை.

அடையாளம் இல்லாதவன்#85701391: நஸ்ரியின் கருத்துக்கள் முற்றிலும் தவறானவை. சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற கதையாகத் தெரிகிறது.

தீவிர அம்னோ அரசியலிலிருந்து ஒய்வு பெற்றவர்கள் உட்பட மந்திரி புசார்களாகவும் முதலமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்ட கடந்த கால கூட்டரசு அமைச்சர்களைப் பாருங்கள். எந்த மலேசிய செல்வந்தரைக் காட்டிலும் அவர்களிடம் அதிகமான அதிகாரமும் செல்வமும் குவிந்துள்ளதைக் காணலாம்.

என்ன பெயர்: நஸ்ரி அவர்களே எந்த ஒரு அரசாங்க நிகழ்விலும் துணைப் பிரதமருக்கு அடுத்து வருவது மந்திரி புசார் ஆகும். கூட்டரசு அமைச்சர் அதற்கு அடுத்த நிலையே.

மந்திரி புசார் அல்லது முதலமைச்சர் என்பவர் அந்த முழு மாநிலத்துக்கும் பொறுப்பேற்கிறார். ஆனால் உங்களைப் போன்ற கூட்டரசு அமைச்சர்கள் ஒரிரு துறைகளுக்கு மட்டும் பொறுப்பாக உள்ளனர்.

கதைகள்: மந்திரி புசார் மாநில அரசாங்கத்தின் தலைவர். அங்கு கூட்டரசு அமைச்சரைக் காட்டிலும் அதிக தலைமைத்துவ வாய்ப்புக்கள் கூடுதலாக உள்ளன.

அதனால் தான் உள்துறை, வெளியுறவு, தற்காப்பு அமைச்சர்களைப் போன்று பல கூட்டரசு அமைச்சர்கள் பயனற்றவர்கள். நாட்டுக்குள் ஊடுருவியவர்களை விரட்ட முடியாமல் அவர்கள் தடுமாறுகின்றனர்.

எதுவும் நடக்கும்: “பதவி இறக்கப்பட்ட” கூட்டரசு அமைச்சர் ஒருவர் சரவாக் மாநிலத்தில் பணக்கார முதலமைச்சராகத் திகழ்கிறார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தாம் அதிகாரத்தில் நிலைத்திருக்க அவரது ஆதரவை வேண்டிக் கொள்கிறார்.

லிம் சொங் லியாங்: அமைச்சர் என்ற முறையில் நீங்கள் கொள்ளையடித்ததை அமைச்சரவைத் தலைவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். மந்திரி புசாராக இருந்தால் உங்கள் ஆட்சி மன்ற உறுப்பினர்கள் தங்களை கொள்ளையை உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.

ஒருவர் மாநில அமைச்சரவையின் தலைவர். இன்னொன்று கூட்டரசு அமைச்சரவையில் சாதாரண உறுப்பினர். ஆகவே இதில் எது பெரியது ?

குடிமகன்: சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அவர்களே, உங்கள் நேர்மைக்கு நன்றி. நீங்கள்அனைவரும் பதவி, அதிகாரம், பணம் ஆகியவற்றை மட்டுமே நாடுகின்றீர்கள் என்பதை உங்கள் உள்மனதிலிருந்து வெளிப்படையாக ஒப்புக் கொண்டு விட்டீர்கள்.

சர்பினாலியன்: நஸ்ரி அவர்களே, மந்திரி புசார் பதவி பற்றியோ அல்லது அமைச்சராக வருவது பற்றியோசிந்திக்க வேண்டிய அவசியமில்லை. நல்ல எதிர்த்தரப்பாகத் திகழ தயாராகுங்கள்.

மை கீ: வரும் தேர்தலில் பேராக்கில் பக்காத்தான் வெற்றி பெற்றால் எப்படி பிஎன் உறுப்பினர் ஒருவர் மந்திரிபுசாராக முடியும் என நான் யோசிக்கிறேன்

TAGS: